ஆவி இல்லை AI.. செத்து போய் 4 வருடத்திற்கு பிறகு நீதிமன்ற படி ஏறிய இளைஞர்.. இது எப்படி சாத்தியம்?
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட இளைஞர் ஒருவர் ஏஐ மூலம் மறுபிறவி எடுத்திருக்கிறார். ஏஐ வெர்ஷனில் அமெரிக்காவில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட இளைஞர் ஒருவர் ஏஐ மூலம் மறுபிறவி எடுத்திருக்கிறார். ஏஐ வெர்ஷனில் நீதிமன்றப் படி ஏறிய அந்த இளைஞர் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதன் பிறகே அந்த நீதிபதியும் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் ஏஐ பயன்பாடு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ மயம் ஆகிவருகிறது. இதன் மூலம் நாம் கற்பனை கூடச் செய்ய முடியாத விஷயங்களையும் ஈஸியாக செய்ய முடிகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் ஏற்பட்ட சிறு மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவர், இப்போது ஏஐ மூலம் மறுபிறவி எடுத்து வந்து அங்குள்ள அரிசோனா நீதிமன்றப் படிகளில் ஏறியிருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

என்ன நடந்தது
அதாவது 2021ம் ஆண்டு கிறிஸ்டோபர் பெல்கி (37) மற்றும் கேப்ரியல் ஹோர்காசிடாஸ் (50) இடையே காருக்கு வழிவிடுவது தொடர்பான விஷயத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது பெல்கி காரில் இருந்து இறங்கி கேப்ரியல் கார் அருகே சென்றுள்ளார். பெல்கி என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கூட கேட்காத கேப்ரியல் அவரை சுட்டுத் தள்ளிவிட்டார். இதில் பெல்கி உயிரிழந்தார்.
ஏஐ மூலம் மறுபிறவி
இந்தக் கொலைக் குற்றச்சாட்டிற்காக கேப்ரியலை போலீசார் கைது செய்தனர். கடந்த 4 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அதில் கேப்ரியல் குற்றவாளி என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதற்கிடையே நீதிமன்றத்தில் திடீரென பெல்கி தோன்றினார். உயிரிழந்த பெல்கி எப்படி தோன்றியிருக்க முடியும் என நீங்கள் கேட்கலாம்.. ஏஐ தான் அதைச் சாத்தியப்படுத்தியுள்ளது.
சாம்பல் கலர் பேஸ்பால் கேப், ஆலிவ் பச்சை டீசர்ட் அணிந்திருந்த அவர், 4 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதேபோல தாடியுடன் நீதிமன்றத் திரையில் ஏஐ மூலம் தோன்றியுள்ளார். அவர் சாட்சி சொல்ல நீதிமன்றத்திற்கு வரவில்லை. சட்டத்திலும் அதற்கு இடமில்லை. மாறாக ஏஐ மூலம் தோன்றிய அவர், நீதிமன்றத்தில் சில முக்கிய கருத்துகளைக் கூறினார். தன்னை சுட்டுக்கொன்ற கேப்ரியலை மன்னித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
மன்னித்துவிட்டேன்
ஏஐ வெர்ஷனாக பேசிய பெல்கி, "என்னைச் சுட்டுக் கொன்ற கேப்ரியலிடம் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. நாம் ஒருவரை ஒருவர் அப்படியொரு மோசமான சூழலில் சந்திருக்கத் தேவையில்லை. நாம் வேறொரு உலகில் நண்பர்களாகக் கூட இருந்திருக்கலாம்.. மன்னிப்பையும் மன்னிக்கும் கடவுளையும் நான் எப்போதும் நம்பியுள்ளேன். இப்போதும் அதை நம்புகிறேன்" என்றார்.
மேலும், உயிரோடு இருந்திருந்தால் 4 ஆண்டுகளில் எவ்வளவு வயதாகி இருக்குமோ.. அதுபோன்ற லுக்கில் தான் பெல்கி நீதிமன்றத்தில் தோன்றினார். அப்போது பெல்கியின் ஏர் வெர்ஷன், "வயதாவது என்பது அனைவருக்கும் கிடைக்காது.. அதுவுமே ஒரு பரிசு தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு ஓவராக ரியாக்ட் செய்ய வேண்டாம்" என்றார்.
நீதிபதி தீர்ப்பு
பெல்கி ஏர் வெர்ஷனில் வந்து இதுபோல பேசியதைக் கேட்டு நீதிபதி டாட் நெகிழ்ச்சியடைந்தார். ஏஐ தொழில்நுட்பத்தைப் பாராட்டுவதாகச் சென்ன நீதிபதி டாட், ஏஐ பெல்கி சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நாம் நினைவில் கொண்டாலே கோபத்தில் தவறு செய்ய மாட்டோம் என குறிப்பிட்டார். மேலும், பெல்கியை கொலை செய்த கேப்ரியலுக்கு 10.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications