பொண்ணுங்கனா பிரச்னை.. எனக்கு கார் போதும்! காதல், காமம் எல்லாம் அது கூட தான்! சிலிர்க்கும் இளைஞர்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இளைஞர் வினோதமான ஒன்றை வினோதமான முறையில் காதலித்து வருகிறார்.
காதலுக்குக் கண் இல்லை என்ற ஒரு பழமொழி உள்ளது. அதாவது காதல் யார் மீது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரும் என்பதே இதன் அர்த்தம்!
அப்படி ஒரு சம்பவம் தான் அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் என்ற இடத்தில் நடந்துள்ளது. ஆனால், ஆர்கன்சாஸ் சேர்ந்த இந்த இளைஞர் அதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுவிட்டார் என்றே சொல்லலாம்.

மகிழ்ச்சியான உறவு
மகிழ்ச்சியான உறவுக்கான திறவுகோல் என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதில் இருக்கும். அமெரிக்காவைச் சேர்ந்த நதானியேல் என்ற நபருக்கு மகிழ்ச்சிக்கான திறவுகோல் அவரது கார் சாவியாக இருக்கிறது.. ஏனென்றால் அவர் தனது 1998 செவி மான்டே கார்லோ காருடன் காதல் உறவில் இருக்கிறார். இந்த காருடன் அவருக்கு இருக்கும் உறவை முதலில் கடந்த 2012இல் பொதுவெளியில் அவர் பகிர்ந்து கொண்டு இருந்தார். அப்போது முதல் இப்போது வரை இருவரும் தான் கலக்கல் ஜோடியாக வலம் வருகிறார்கள்!

கார் காதல்
தனது செல்ல காதலிக்கு, அதாவது காருக்கு சேஸ் என்று செல்லப்பெயரும் சூட்டி உள்ளார். சேஸை காதலிப்பதாகவும் இருவரும் டெலிபதி மூலம் பேசிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். அது மட்டுமின்றி பல முறை காருடன் உடலுறவும் கூட வைத்துக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆப்ஜெக்டோபிலியா
இவர் தன்னை ஆப்ஜெக்டோபிலியா (Objectophilia) என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். அதாவது இவருக்குப் பெண்களை அவ்வளவு ஏன் ஆண்களைப் பார்த்தால் காதல் வராதாம். இந்த காரின் மீது மட்டுமே தனது ஒட்டுமொத்த அன்பையும் செலுத்தி வருகிறார்.

கண்டதும் காதல்
காருடன் தனக்கு இருந்த உறவை அவர் சுமார் 7 ஆண்டுகளாக ரகசியமாக வைத்துக் கொண்டு இருந்துள்ளார். 2012இல் தனியார் டிவி சேனலில் வந்த ஆவணப்படத்தில் தான் நதானியேல் முதல்முறையாகத் தனது காதலியை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருப்பார். 2005இல் ஒரு கார் டீலர்ஷிப்பில் சேஸை முதல்முறையாகப் பார்த்ததாகவும் அதன் பின்னர் பார்த்த உடனேயே இருவருக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டதாகவும் அவர் விளக்கினார். அப்போதிருந்து, அவர்கள் காதலித்து வருவதாகவும் இடையே பல சமயங்களில் அவர்களுக்கு இடையில் உடலுறவும் கூட நடந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

நேசிக்கிறேன்
இது குறித்து அவர் கூறுகையில், "எனது காருடன் நான் சீரியஸான உறவில் இருக்கிறேன். பார்த்த உடன் வந்த காதல் இது! அவரது உட்புறம் (காரைத் தான் சொல்கிறார்) என அனைத்தும் எனக்கு பக்காவாக செட் ஆனது. இருவருக்கு இடையே ஒரு இணைப்பு ஏற்பட்டது. நான் ஏன் இப்படி உணர்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் சேஸை முழுமையாக நேசிக்கிறேன் என்று எனக்குத் தெரியும். நாங்கள் எப்போதும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

நெருக்கம்
பல சமயங்களில் காருடன் நெருக்கமாக இருந்து உள்ளேன். அடிக்கடி காரின் தலை பகுதியில் சாய்ந்து கொண்டு அன்பை வெளிப்படுத்துவேன். சில சமயங்களில் காரின் கீழ் கூட சென்றுவிடுவேன். அவருக்கு (கார் தான்) அது மிகவும் பிடிக்கும். சேஸுடன் நெருக்கமாக இருப்பது எப்போதுமே சந்தோஷம் தான்" என்றார்.

கார் தான் ரியல் கேர்ள் பிரெண்ட்
நதானியேல் டீன் ஏஜில் இருந்த போதே அவருக்குகார் மீது விருப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அப்போது அவருக்கு பல்வேறு கேர்ள் பிரெண்ட்கள் இருந்ததால் அது குறித்து அவர் பெரிதாக எதுவும் நினைக்கவில்லையாம். இருந்தாலும் கூட கடந்த காலங்களில் எந்தவொரு பெண்ணும் சேஸ் காதலிப்பது போல தன்னை உண்மையாகக் காதலித்தது இல்லை என்கிறார் நதானியேல்!

ஊர் அறிந்த ரகசியம்
நதானியேல் தொடர்ந்து கூறுகையில், "யாராவது எனது சேஸை கீறினால் எனக்கு செம கோபம் வந்துவிடும். உயிரே போனது போல ஆகிவிடும். எனது உறவு குறித்து நான் வெளிப்படையாக எல்லாரிடமும் சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் அவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என அச்சமாக உள்ளது. எனது நண்பர்கள் கூட என்னை வினோதமாகப் பார்க்கத் தொங்கிவிட்டனர். அதனால் தான் எனது அப்பாவிடம் கூட இதைச் சொல்லவில்லை" என்றார் அந்த சர்வதேச டாக்குமென்டரியில்!












Click it and Unblock the Notifications