இப்பயாவது கொடுக்கணும்னு தோணுச்சே!.. 46 ஆண்டுகள் கழித்து நூலகத்தில் புத்தகத்தை ரிடர்ன் செய்த நபர்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு நூலகத்தில் வாங்கிய புத்தகத்தை 46 ஆண்டுகள் கழித்து ஒருவர் திருப்பி கொடுத்த சம்பவம் இணையத்தில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி, கல்லூரி நூலகங்களில் புத்தகங்களை வாங்கி படித்துவிட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் மீண்டும் ஒப்படைப்பது வழக்கம். ஒரு வேளை புத்தகங்களை ஒப்படைக்காதவர்கள் குறித்து நூலகர் தகவல்களை பள்ளி, கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்புவார்.
அந்த நூல்களை திருப்பி கொடுத்தால் மட்டுமே அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஒரு வேளை புத்தகம் தொலைந்து போய்விட்டால் அதற்கான தொகையை வழங்கிவிட வேண்டும். இதுதான் விதி.

பொது நூலகம்
ஒரு வேளை பொது நூலகங்களில் இருந்து புத்தகங்கள் வாங்கினால் அந்த நபர் எப்போது திருப்பி கொடுக்கிறாரோ அது வரை அபராதம் கூடி கொண்டே போகும். தாமதமாக திருப்பி கொடுக்கும் புத்தகங்களுக்கு இத்தனை நாளைக்கு இவ்வளவு அபராதம் என விதிகள் இருக்கும். அதன்படி நூலகர் வசூல் செய்வர்.

6 மாதங்கள்
நமக்கு தெரிந்து இது போன்ற புத்தகங்களை 6 மாதங்கள் அல்லது ஓராண்டு வரை அதிகபட்சமாக வைத்திருந்து திருப்பி கொடுப்போம். அதற்கான அபராதத் தொகையையும் செலுத்தி விடுவோம். புத்தகத்தில் டேமேஜ் இருந்தால் அதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும்.

1976 ஆம் ஆண்டு
ஆனால் அமெரிக்காவில் ஒருவர் 1976 ஆம் ஆண்டு நூலகத்திலிருந்து வாங்கிய புத்தகத்தை தற்போது 2022 ஆம் ஆண்டு திருப்பி அளித்த சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நம்ப முடியவில்லையா, உண்மை இதுதான் நம்பித்தான் ஆக வேண்டும். அமெரிக்காவில் ஓக்லஹோமா பகுதியை சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஒவாஸோ நூலகத்தில் கடந்த 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் Annie Annie என்ற புத்தகத்தை வாங்கியுள்ளார்.

இப்பயாவது கொடுக்க மனம் வந்ததே
அதை அதே ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி திருப்பி கொடுக்க ட்யூ டேட் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபரோ அந்த புத்தகத்தை சுமார் 46 ஆண்டுகள் கழித்து ஒப்படைத்துள்ளார். அந்த நபர் யாரென்று தெரியவில்லை, இந்த நூலகம் முழுவதும் கணினிமயமாக்கப்பட்டுள்ளதால் அந்த புத்தகத்தை சரிபார்த்தது எல்லாம் கணினிதானாம். இந்த புத்தகத்தை திருப்பி கொடுத்ததற்கு நன்றி என அந்த நூலகம் பேஸ்புக்கில் பதிவு போட்டுள்ளது.

அபராதம் இல்லை
இதை படித்தவர்களுக்கு 46 ஆண்டுகள் என்றால் அபராதத் தொகை அந்த புத்தகத்தின் விலையை காட்டிலும் பல மடங்கு இருக்குமே என கருதுவர் என்பதால் அந்த நூலகம் ஒரு பதிலையும் போட்டுள்ளது. இந்த புத்தகத்தை சரி பார்த்தது கணினிதான். இதை யார் வாங்கிக் கொண்டு போனார்கள் என்று கூட தெரியாது. எனவே தாமத கட்டணம் குறித்து கவலை வேண்டாம் என தெரிவித்துள்ளது.
-
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications