லாட்டரியில் அடித்த 2,800 கோடி.. கவுண்டமனி ஸ்டைலில் ஆசையாய் போன நபர்.. கடைசியில் இப்படி ஆயிடுச்சே
வாஷிங்டன்: அமெரிக்க லாட்டரி குலுக்கலில் ஒருவருக்கு 2,800 கோடி ருபாய் பரிசு விழுந்துள்ளது. ஆனால், கடைசியில் அவரால் அந்த பரிசுத்தொகையை வாங்க முடியவில்லை. இவ்வளவு பெரிய தொகையை வென்ற போதும் கடைசியில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக சோகத்தில் முடிந்து இருக்கிறது. அடுத்து அவர் என்ன செய்தார் என்பது குறித்து விவரங்களை பார்க்கலாம்.
ஒரே பாட்டில் கோடீஸ்வரர் ஆவது படத்தில் தான் நடக்கும்.. நிஜத்தில் எல்லாம் நடக்காது பாஸ் என்று சொல்வதை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால், ஒரே பாட்டில் அல்ல ஒரே எண்ணில் கோடீஸ்வரர் ஆவது எல்லாம் நிஜத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. லாட்டரியில் பம்பர் பரிசுத்தொகை வென்று ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதி ஆகும் செய்திகள் வெளியாகி பலரையும் பொறாமை பட வைக்கும்.

பொதுவாக லாட்டரி என்பது அதிர்ஷ்ட விளையாட்டுத்தான். ஒருவர் கோடீஸ்வரர் ஆனாலும் லாட்டரி சீட்டுக்களை வாங்கி குவித்து பல நபர்கள் ஏமாந்து போவதோடு பொருளாதார இழப்பையும் சந்திக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டுதான் பல இடங்களில் லாட்டரிக்கு அனுமதி இல்லை. தமிழ்நாட்டிலும் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு அனுமதி இல்லை.
ரூ.2800 கோடி பரிசு: இந்தியாவில் கேரளா, அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு அனுமதி உள்ளது. இதேபோல, அமெரிக்காவிலும் சில மாகாணங்களில் லாட்டரி சீட்டுக்கள் உள்ளன. ஆங்கு பவர்பால் லாட்டரி மிகவும் பிரபலமானது ஆகும். இந்த லாட்டரியில் பரிசுகளை வாங்கி குவித்து கோடிகளில் புரள்வது குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் சீக்ஸ் என்பவருக்கு லாட்டரியில் 340 மில்லியன் ( இந்திய மதிப்பில் ரூ.2,800 கோடி) பரிசுத்தொகை விழுந்துள்ளதாக லிஸ்டில் பெயர் வந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற சீக்ஸ், பரிசுத்தொகையை கிளைம் செய்ய போன போது ட்விஸ்ட் நடந்துள்ளது. இது பற்றிய விவரத்தை பார்ப்போம்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே: கடந்த மாதம் 6 ஆம் தேதி ஜான் சீக்ஸ் என்பவர் அமெரிக்காவில் உள்ள பவர் பால் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். லாட்டரி குலுக்கல் நடைபெற்ற மறுதினம், வின்னிங் நம்பர் பட்டியலில் ஜான்சீக்ஸ் வாங்கிய லாட்டரி டிக்கெட்டின் எண் இடம் பெற்றுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்த ஜான் சீக்ஸ் மறுநாள் தனக்கான பரிசுத்தொகையை கோர சென்றுள்ளார்.
ஆனால், லாட்டரி டிக்கெட் பரிசுத்தொகை எண் தவறாக பப்லிஷ் ஆகிவிட்டதாக கூறி பரிசுத்தொகையை வழங்க மறுத்து இருக்கிறார்கள். இது என்னடா.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்பார்களே! அதுபோல லிஸ்டில் நம்பர் வந்தும் பரிசுத்தொகைக்க்கு அல்லோலப்பட வேண்டியுள்ளதே என சோகம் அடைந்த ஜான் சீக்ஸ், வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

பணம் கிடையாது என நிராகரித்தனர்: இதன்படி தனது வழக்கறிஞரை தொடர்பு கொண்டு கோர்ட்டில், பரிசுத்தொகை மற்றும் அதற்கான வட்டியுடன் சேர்த்து தனக்கு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த வழக்கை கோர்ட் வரும் 23 ஆம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக கூறியுள்ளது. நீதிமன்ற விசாரணையை ஆவலோடு எதிர்பார்த்து இருக்கும் ஜான் சீக்ஸ் இது தொடர்பாக கூறியதாவது:-
எனக்கு பரிசுத்தொகை விழுந்ததாக கேள்விப்பட்டதும் நான் மிகழ்ச்சி அடைந்தேன். இருந்தாலும் அளவுக்கதிமாக சந்தோஷம் அடையவில்லை. எனது நண்பருக்கு போன் செய்தேன். அவர் ஆலோசனையின் படி லிஸ்டில், நம்பர் இருந்ததை புகைப்படம் எடுத்துக்கொண்டேன். மறுநாள் லாட்டரி அலுவலகத்திற்கு சென்ற போது, எனக்கு பணம் கிடையாது என நிராகரித்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு: விதிகளின் படி எனது டிக்கெட் செல்லுபடியானது இல்லை என்று நீதிமன்றத்தில் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால், எட்டு விதமான வழக்குகளை நான் தாக்கல் செய்துள்ளேன். நம்பிக்கை துரோகம், அலட்சியம், மன உளைச்சலுக்கு ஆளாக்கியது, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளேன்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications