அதிர்ஷ்டம் எப்படியெல்லாம் அடிக்குது பாருங்க.. கூல் டிரிங்ஸ் குடிக்க போனவருக்கு அடித்த ரூ. 8 கோடி!
வாஷிங்டன்: அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் அடிக்கும் போல.. என பலரையும் பொறாமைப்பட வைக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்தவருக்கு பணம் கொட்டோ கொட்டு எனக் கொட்டியுள்ளது. இது குறித்த சுவாரசிய தாகவலை இங்கே பார்க்கலாம்...
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது என்ற பாடலில் சரத்குமார் எப்படி ஒரே பாட்டில் கோடீஸ்வரர் ஆனாரோ.. அதைப்போல நாமும் பணக்காரர் ஆகிவிட மாட்டாமோ என பலரும் பகல் கனவு காண்பார்கள்.. அப்படி டக்கென கோடீஸ்வர் ஆக வேண்டும் என்றால் லாட்டரியில் பணம் அடித்தால்தான் உண்டு. லாட்டரியை நம்பி பெரும் பொருளாதார இழப்பை பலரும் சந்திக்கிறார்கள்..

ஆனால் யாரோ ஒரு அதிர்ஷ்டக்காரருக்கு பணம் அடித்து அவரது வாழ்க்கையே மாற்றிவிடுகிறது என்பதையும் மறுக்க முடியாது. அப்படியான ஒரு நிகழ்வுதான் அமெரிக்காவை இந்த அதிர்ஷ்டக்காரருக்கு கிடைத்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்தவர் ரோனேகே. இவர் தனது குடும்பத்தினரை சந்திக்க காரில் சென்று கொண்டிருந்துள்ளார். லாட்டரியில் அதிகம் ஆர்வம் இல்லாத ரோனேகே, அன்று திடீரென குளிர்பானம் வாங்குவதற்காக சாலையோரம் உள்ள கடையில் வண்டியை நிறுத்தியுள்ளார். குளிர்பானம் வாங்கியபடியே கடையை நோட்டமிட்ட அவருக்கு அப்போது அங்கு லாட்டரி கண்ணில் பட்டது.
உடனே இதை வாங்கினால் என்ன அவரது மனத்திற்கு தோன்றியுள்ளது. உடனடியாக யோசிக்காமல் வாங்கியுள்ளார். அதுதான் அவரது வாழ்க்ககைகே பெரிய திருப்பு முனையாக மாறிவிட்டது. ஓவர் நைட்டில் ஒபாமா என்று சொல்வார்களே அது போல.. அந்த லாட்டரியால் பல கோடி ரூபாய்க்கு அதிபதியாகிவிட்டார். அவருக்கு 10 லட்சம் டாலர் (ரூ.8.35 கோடி) பரிசாக கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியின் எல்லைகே போய்விட்டார் ரோனேகே...
இது குறித்து அவர் கூறுகையில், முதலில் நான் தவறாக வாசித்துவிட்டேனோ என நினைத்தேன். இவ்வளவு பெரிய தொகை வேறு யாருக்கும் கிடைத்ததா? என எனக்குதெரியவில்லை. 30 ஆண்டுகளாக கிடைக்க கூடிய 1 மில்லியன் டாலர் தொகையை தேர்வு செய்வதற்கு பதிலாக ஒரே தவணையில் 6 லட்சத்து 25 ஆயிரம் டாலர் போதும் வாங்கியிருக்கிறார். இதில் அவருக்கு வரியும் பிடித்தம் செய்யப்படும்.
எப்படி பார்த்தாலும் இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய் கிடைக்கும்.. இந்த பணத்தை எப்படி செலவு செய்ய போகிறீர்கள் எனக் கேட்ட போது அதுபற்றியெல்லாம் பிளான் இல்லை என சொல்லும் ரோனேகே... அப்படியே இருந்தாலும் அது சீக்ரெட் தான் என்றார். அண்மையில் இப்படித்தான் மாஸ்செசூட்ஸ் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தனது பிறந்த நாளில் வரும் எண்ணைக்கொண்ட லாட்டரியை வாங்கி போட்டார்.
அவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை விழுந்தது. இதில் சுவாரசியம் என்னவென்றால் அவரது மனைவிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக லாட்டரியில் பம்பர் பரிசு கிடைத்துள்ளது. தற்போது அவரது கணவருக்கு கிடைத்துள்ளது. இதனால், ரொம்ப அதிர்ஷ்டக்கார தம்பதிகள்தான் என்று அப்பகுதி மக்கள் அவர்கள் கூறி வருகிறார்களாம்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications