Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுவானில் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய.. பயணிகள் விமானம்! அமெரிக்கா சும்மாவே இருக்காதா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கரீபியன் கடல் பகுதியில் ஜெட் ப்ளூ பயணிகள் விமானம் மற்றும் அமெரிக்க ராணுவ விமானம், ஒன்றுடன் ஒன்று மோதுவதை போல நெருக்கமாக வந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நல்வாய்ப்பாக உஷாரான ஜெட் ப்ளூ பயணிகள் விமானத்தின் விமானி, சரியான நேரத்தில் விமானத்தின் திசையை மாற்றியதால், விமானம் தப்பித்திருக்கிறது.

கரீபியன் கடல் பகுதியில் கியுராசோவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஜெட் ப்ளூ பயணிகள் விமானம் 1112, நியூயார்க் நோக்கி புறப்பட்டிருக்கிறது. ஆனால், திடீரென 4 கி.மீ தொலைவில் அமெரிக்காவின் ராணுவ டேங்கர் விமானம் ஒன்று குறுக்கிட்டிருக்கிறது. இதனால் ஜெட் ப்ளூ விமானி உடனடியாக விமானத்தின் வேகத்தை குறைத்து, அதன் திசையை கன்ட்ரோல் செய்திருக்கிறார். இப்படி செய்யாமல் 20 விநாடிகள் தொடர்ந்து பறந்திருந்தால் நிச்சயம் இரண்டு விமானங்களும் நடுவானில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.

US Military Plane

கியுராசோ தீவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, வெனிசுலாவின் கடற்பகுதியிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பயணிகள் விமானி, விமான போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் அளித்திருக்கிறார்.

இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம், அமெரிக்க ராணுவ விமானத்தில் டிரான்ஸ்பான்டர் வேண்டும் என்றே ஆஃப் செய்யப்பட்டிருப்பதுதான். இது ஆன் செய்யப்பட்டிருந்தால், அதிலிருந்து வரும் சிக்னல்கள் தரையில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். விமான கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள், இந்த விமானத்தில் பாதையில் மற்ற விமானங்கள் குறுக்கிடாமல் இருக்க பார்த்துக் கொள்வார்கள். இந்த சிக்னல்கள் விமானம் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் பறந்துக்கொண்டிருக்கிறது என்பதை தெரியப்படுத்தும்.

அதேபோல அருகில் பறக்கும் மற்ற விமானங்களுக்கும் இந்த டிரான்ஸ்பான்டர் சிக்னல்களை அனுப்பும். இதனால் இரண்டு விமானங்கள் மோதுவது தவிர்க்கப்படும்.

வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தில், இந்த டிரான்ஸ்பான்டரை ஆஃப் செய்து வைத்திருப்பதுதான் விபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று பயணிகள் விமானி கூறியுள்ளார். டிரான்ஸ்பான்டர் ஆஃப் செய்யப்பட்டிருப்பதால் விமானம் எந்த திசையில் பறக்கிறது? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், ஆனால் நிச்சயமாக விமானம் வெனிசுலா தலைநகரை நோக்கிதான் பறந்துக்கொண்டிருந்தது என்றும் விமானி கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே வெனிசுலாவை சுற்றி அமெரிக்க போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, ராணுவ விமானங்களும் ரகசியமாக வந்து செல்கின்றன. கியுராசோ சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இதனை உறுதி செய்திருக்கிறது. கடந்த ஓரிரு நாட்களில் 3 விமானிகளுக்கு, ராணுவ விமானம் குறித்த எச்சரிக்கையை வழங்கியதாகவும் ஆணையம் கூறியிருக்கிறது.

விரைவில் வெனிசுலாவுடன் அமெரிக்கா போரில் ஈடுபடும் என்பதால், இந்த பகுதியில் மேலும் மோதல் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+