ரஷ்யா போர்குற்றம் புரிந்துள்ளது உண்மைதான்.. ஆதரம் உள்ளது.. அடித்துச் சொல்கிறார் ஆண்டனி பிளிங்கன்..!
வாஷிங்டன் : உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி ப்ளிங்கன் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பத்து நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு நாட்டு மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
போர் காரணமாக உக்ரைன் நாட்டை விட்டு ஏராளமானோர் வெளியேறி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியானது வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர் தாக்குதல்
தாக்குதலை நிறுத்த கோரி பல நாடுகள் கோரிக்கை விடுத்தும் ரஷ்யா அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில் ரஷ்யா மீது பொருளாதார ரீதியாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலமுனை தாக்குதலை தொடங்கி உள்ளன. உக்ரைனின் சிறு நகரங்களைக் கைப்பற்ற தொடங்கியுள்ள நிலையில், பெரிய நகரங்களை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

சர்வதேச விசாரணைக் குழு
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக, சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழுவை அவசரமாக நிறுவ முடிவு செய்த ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் நாடுகளின் அனுமதி கோரியும் வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால் இந்த வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்கவில்லை. 47 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில் இந்த தீர்மானம் ஆதரவாக 32 வாக்குகளும், எதிராக இரண்டு வாக்குகளும் (ரஷ்யா மற்றும் எரித்திரியா) பதிவாகின. இந்தியா, சீனா, பாகிஸ்தான், சூடான் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட 13 நாடுகள் வாக்களிக்கவில்லை.

தீர்மானம் நிறைவேற்றம்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து மூர்க்கமாக நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவு, குடியிருப்பு பகுதிகளில் விதிகளை மீறி தாக்குதல் நடத்தி, போர்க்குற்றம் புரிந்துள்ளதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேசே நீதிமன்றத்திலும் உக்ரைன் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், ரஷியாவின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்கக் கோரி ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ரஷ்யாவின் போர் குற்றம்
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக அமெரிக்காவில் துறை அமைச்சர் ஆண்டனி ப்ளிங்கன் கூறியுள்ளார். அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் பேசிய அவர், உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான நம்பகமான தகவல்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்த கவனத்தை எப்போது கொண்டுள்ளதாகவும், உக்ரைனுக்கு தேவையான உதவிகளை அமெரிக்க தொடர்ந்து வழங்கும் எனவும் கூறினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications