"இது மட்டும் நடந்தால்.. 3ஆம் உலகப் போரை தடுக்கவே முடியாது.."அதிபர் பைடன் வார்னிங்.. எதை சொல்கிறார்?
வாஷிங்டன்: உக்ரைன் உடனான போர் தொடர்ந்து உச்சமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். 24ஆம் தேதி போரை ஆரம்பித்தது. இந்தப் போர் 3ஆவது வாரமாக இன்றும் தொடரும் நிலையில், இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை.
சமீபத்தில் தான் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் துருக்கில் நாட்டில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டும் என எதிர்பார்த்த நிலையிலும், அதுபோல எதுவும் நடக்கவில்லை.

கெமிக்கல் ஆயுதங்கள்
உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களின் மீது ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாகத் தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல் நகரங்கள் மீது ரஷ்யா ராணுவத்தினர் இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே உக்ரைனும் அமெரிக்காவும் இணைந்து உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருவதாக ரஷ்யா இன்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தது.

அதிபர் பைடன்
மேலும், போர் சமயத்தில் ரஷ்யா மீது இதைப் பயன்படுத்தவும் இரு நாடுகளும் திட்டமிட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும், இதற்காக எவ்வித ஆதாரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை. இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடன் ரஷ்யாவின் இந்தக் குற்றச்சாட்டிற்குக் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். ரஷ்யா 3ஆம் உலகப் போருக்கு வித்திடுவதாகவும் சாடியுள்ளார். வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் பைடன் ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தார்.

கடும் விலை கொடுக்க நேரிடம்
இது தொடர்பாக அதிபர் பைடன் கூறுகையில், "நான் உளவுத்துறை அறிக்கைகள் குறித்துப் பேசப் போவதில்லை. ஆனால் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் (ரஷ்யா) ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அதற்குக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும்" என்றார். ரஷ்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க, உக்ரைனில் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்பு குற்றச்சாட்டு குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெள்ளிக்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்துகிறது. உக்ரைன் போருக்குப் பிறகு, அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது அறிவித்து வருகிறது.

ரஷ்யா குற்றச்சாட்டு
குறிப்பாகக் கச்சா எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட வர்த்தக உறவுகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக சில நாட்களுக்கு முன்பு பைடன் அறிவித்திருந்தார். இது ரஷ்யாவின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். அதன் பின்னரே உயிரியல் ஆயுதம் தொடர்பான குற்றச்சாட்டை ரஷ்யா சுமத்தி உள்ளது. உக்ரைன் போர் தொடங்கியது முதலே பல்வேறு மேற்குலக நாடுகளைப் போலவே அமெரிக்காவும் உக்ரைன் நாட்டிற்கு உதவி வருகிறது. ராணுவ விமானங்கள் உள்ளிட்ட ராணுவ ஆயுதங்களை உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா அனுப்பி வருகிறது. மேலும், ரஷ்யா ராணுவத்தின் நடமாட்டம் குறித்துக் கிடைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்களையும் உக்ரைன் உடன் அமெரிக்கா தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருகிறது.

3ஆம் உலகப் போர்
ஆனால் இது மட்டும் போதாது அமெரிக்க ராணுவம் உக்ரைனுக்கா நேரடியாகக் களத்தில் இறக்க வேண்டும் என உக்ரைன் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், இது சாத்தியமற்றது எனக் குறிப்பிட்ட அதிபர் பைடன், "நாங்கள் உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிராகப் போரிட மாட்டோம். நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதல் ஏற்படுவது மூன்றாம் உலகப் போருக்கு வித்திட்டும். அதைத் தடுக்க முடியாது. எனவே, நேட்டோ படைகள் ரஷ்யாவுடன் மோதுவது நிச்சயம் தடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications