கொரோனாவிலிருந்து விடுதலை.. இனி யாருக்கும் பரப்ப முடியாது.. டொனால்ட் ட்ரம்ப் அலப்பறை தாங்கல
வாஷிங்டன்: கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு அந்த நோய் தாக்காமல் இருக்கும் அளவுக்கு உடல், நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக, அக்டோபர் முதல் வாரம், வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை வெள்ளை மாளிகை திரும்பினார் ட்ரம்ப்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் பிறகு வெள்ளை மாளிகையில் வைத்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

குணமடைந்த ட்ரம்ப்
தற்போது அவருக்கு கொரோனா நோய் தொற்று முழுமையாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த ஒரு கருத்து இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் கூறுகையில், வெள்ளை மாளிகையில் இருந்து மருத்துவர்கள் குழு முழுமையாக வெளியேறி விட்டது. இதனுடைய அர்த்தம் என்னவென்றால் நான் இனிமேல் பெற முடியாது. அடுத்தவர்களுக்கும் வழங்க முடியாது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பரவாதாம்
ஒருமுறை கொரோனா நோய் பாதிப்பிலிருந்து குணம் அடைந்து விட்டதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இனிமேல் கொரானா தனக்கு பரவாது. மேலும் தன்னிடம் இருந்து பிறருக்கு பரவாது என்ற அர்த்தத்தில் அவர் ட்விட்டரில் பதிவிட்டார். ஆனால், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை கிடையாது.

வதந்தியின் மறு உருவம்
இதேபோல ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரை சாப்பிட்டால் கொரோனா வராது என்று கூறி வதந்தி பரப்பினர். இப்போது, தன்னால் இனிமேல் யாருக்கும் கொரோனா பரவாது என்று கூறி மற்றொரு வதந்தியை கிளப்பி உள்ளதால் டுவிட்டர் விதிமுறைகளுக்கு எதிராக ஒரு கருத்தை ட்ரம்ப் கூறுவதாக ட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்ப் மறுபடியும் ஈடுபட்ட உள்ளார். அதற்கு முன்பாக இப்படியான ஒரு கருத்தை அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications