‛நானும்.. ஜில்லும்’.. தாய் மறைவால் கலங்கிய பிரதமர் மோடி.. ஆறுதலோடு தேற்றிய அமெரிக்க அதிபர் பைடன்
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி தாய் ஹீரா பென் நேற்று அதிகாலை இறந்த நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பென் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே உள்பட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பென் குஜராத் மாநிலம் காந்திநகரில் வசித்து வந்தார். நரேந்திர மோடியின் தம்பியான பங்கஜ் மோடியுடன் அவர் வசித்து வந்தார்.
ஹீரா பென் சமீபத்தில் தனது 100 வது பிறந்தநாளை கொண்டாடினார். பிரதமர் மோடி தாயை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, ஆசியும் பெற்றார். அதன்பிறகு சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தலின்போது நரேந்திர மோடி, தாய் ஹீரா பென்னை சந்தித்து ஆசி பெற்றார்.

பிரதமர் மோடியின் தாய் மறைவு
இந்நிலையில் ஹீராபென் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அகமதாபாதில் உள்ள யுஎன் மேத்தா இதய நோய் சிகிச்சை மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி நேரில் வந்து பார்த்து சென்ற நிலையில் நேற்று துரதிர்ஷ்டவசமாக காலமானார். ஹீரா பென்னின் உயிர் நேற்று காலை 3.30 மணியளவில் மருத்துவமனையில் பிரிந்தது.

உடல் தகனம்
பிரதமர் நரேந்திர மோடி காந்தி நகர் சென்று தாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அவரது உடலை சுமந்து சென்று இறுதி சடங்குகளுடன் வணங்கினார். அதன்பிறகு ஹீரா பென்னின் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயின் உடலுக்கு நரேந்திர மோடி தனது சகோதரர்களுடன் சேர்ந்து தீவைத்தார். அதன்பிறகு அடுத்து சிறிது நேரத்திலேயே பிரதமர் மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், உலக தலைவர்கள் இரங்கல், ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பதிவில், ‛‛பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு ஜில்லும், நானும் ஆழ்ந்த மற்றும் உள்ளார்ந்த உணர்வு சார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இந்த கடின சூழலில் பிரதமருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பிரார்த்தனை செய்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சே
அதேபோல் இலங்கையின் முன்னாள் அதிபரும், சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பிரதமர் பதவியை இழந்தவருமான மகிந்த ராஜபக்சேவும் பிரதமர் மோடிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛பிரதமர் மோடியின் தாயார் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அன்பிற்குரிய தாயை இழந்து வாடும் பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறனே். இந்த துயரமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பிரதமர் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன'' என தெரிவித்துள்ளார். இதேபோல் பிற நாடுகளின் தலைவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications