உக்கிரமாகும் உக்ரைன் விவகாரம்“சண்டை எங்களுக்கு வேண்டாம்” திடீர் முடிவெடுத்த ஜோ பைடன் -அடுத்தது என்ன?
வாஷிங்டன் : உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய ராணுவ தாக்குதலை ரஷ்யா முன்னெடுக்கும் என நம்புவதாகவும் ஆனால் ரஷ்யாவுடன் போரிடும் எண்ணமில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல்போக்கு தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் போர் பதற்றம் கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது.
எல்லைப் பகுதிகளில் படைகளை நிறுத்தி உள்ள ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிளர்ச்சியாளர்களுக்கு சுதந்திரம்
கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி பிராந்தியங்களான டோனேட்ஸ்க், லூஹான்ஸ்க் ஆகியவற்றின் தலைவர்கள் இரு தினங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், தங்கள் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அறிவிக்குமாறு அவர்கள் கோரியிருந்தனர். இந்தநிலையில் நேற்று தங்களது ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷ்ய அதிபர் புதின் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார்.

புடினுக்கு அனுமதி
ஏற்கனவே எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் இது குறித்து மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஜெர்மனி பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் உக்ரைன் பிரச்சனையில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவத்தை பயன்படுத்த அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவை அனுமதி அளித்துள்ளது.

பதற்றம் அதிகரிப்பு
இதன் காரணமாக போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் ரஷ்யா தலையிடுவதை விரும்பாதவர்களாக மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் போரை தவிர்ப்பதற்காக அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் 105 நிமிடங்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போரை விரும்பவில்லை எனக் கூறிய புடின் அடுத்த நாளே உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக பேசினார்.

ஜோ பைடன் கருத்து
இந்த நிலையில் ரஷ்யாவுடன் போர் புரியும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ரஷ்யாவுடன் போரிடும் நோக்கம் தங்களுக்கு இல்லை எனவும் உலகிற்கு நாங்கள் ஒரு தெளிவான செய்தியைச் சொல்ல விரும்புகிறோம் என்றார். அதாவது அமெரிக்கா தங்கள் நட்பு நாடுகளுடன் சேர்ந்து நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்போம் எனவும், உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய ராணுவ தாக்குதலை அரசு முன்னெடுக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications