போருக்கு நடுவே.. இஸ்ரேல் செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. உற்று கவனிக்கும் சர்வதேச நாடுகள்
வாஷிங்டன்: இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்ல உள்ளார். காசா பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்த நிலையில், ஜோ பைடன் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினர் கடந்த 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினை ஒழித்து கட்டுவோம் என போரில் குதித்தது. இதனால் கடந்த 10 நாட்களாக காசா மீது வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

குண்டு மழை பொழிந்து காசாவின் வானுயர்ந்த கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கியிருக்கிறது. தரைவழி தாக்குதலுக்கும் ரெடியாக இருக்கும் இஸ்ரேல், அதற்காக காசா நகர மக்களை தெற்கு பகுதிக்கு செல்லுமாறு கெடு விதித்து இருக்கிறது. இதனால் மூட்டை முடிச்சுகளுடன் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இடைவிடாது நடந்து வரும் இந்த போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதில் காசா தரப்பில் இதுவரை சுமார் 2,750 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 9,700-க்கு அதிகமானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதல் நடத்தினாலும் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து இருந்தார்.
இத்தனைக்கும் இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவை அமெரிக்கா வழங்கி வருகிறது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் செல்ல உள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜோ பைடன் தனது கொலராடோ பயணத்தை ஒத்திவைத்துள்ளார். இஸ்ரேல் - காசா இடையே இதுவரை இல்லாத அளவுக்கு போர் உச்சம் அடைந்துள்ள சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இஸ்ரேல் பயணம் சர்வதேச அளவில் முக்கியத்தும் பெற்றுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications