பதிலடியால் கோபம்.. சீனாவுக்கு ஒருநாள் தான் டைம்.. டிரம்ப் கெடு! அடுத்து என்னல்லாம் நடக்க போகுதோ
வாஷிங்டன்: அமெரிக்கா விதித்த வரிக்கு பதிலடியாக சீனா, அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரியை விதித்தது. இதனால் கடும் கோபம் அடைந்த டொனால்டு டிரம்ப், சீனாவிற்கு ஒருநாள் கெடு விதித்துள்ளார். அதற்குள் சீனா தனது கூடுதல் வரிவதிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 2 ஆம் தேதி பல்வேறு நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதித்தார். டிரம்ப் விதித்த வரி விதிப்பால் உலக பொருளாதாரம் ஆட்டம் காணும் சூழல் உருவாகியுள்ளது. பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டன. பரஸ்பர வரியை பொருத்தவரை இந்தியாவுக்கு 26 சதவீதம் கூடுதல் வரியை விதித்த டிரம்ப், சீனாவுக்கு மீண்டும் 34 சதவீத வரிகளை விதித்தார்.

அமெரிக்காவுக்கு சீனா பதிலடி
ஏற்கனவே சீனா மீதான வரி உள்ள நிலையில், தற்போதைய வரி விதிப்பின் மூலம் சீனாவுக்கு 54 சதவீதம் வரை கூடுதல் வரிகளை போட்டுள்ளது. அமெரிக்கா வரி விதிப்பு தொடர்பாக பேசியதில் இருந்தே சீனா, எதற்கும் தயார் என்றே பேசி வந்தது. எந்த வகையிலான போருக்கும் நாங்கள் ரெடியாக இருப்பதாக பேசிய சீனா, அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 54 சதவீத வரியை விதித்தது.
அதன்படி முதற்கட்டமாக அமெரிக்காவில் இருந்து வரும் சோயா பீன்ஸ், மாட்டு இறைச்சி, பழங்கள், காய்கறிகள், பால் பொருட்களுக்கு 10 சதவீதமும் கோதுமை, மக்காச்சோளம், பருத்தி, கோழி இறைச்சிக்கு 15 சதவீதமும் சீனா வரி போட்டது. கடந்த 2ம் தேதி அமெரிக்கா 34 சதவீத வரிகளை விதித்த நிலையில் இப்போது சீனா மீண்டும் அமெரிக்காவுக்கு 34 சதவீத வரியை விதித்துள்ளது.
சீனாவுக்கு ஒருநாள் கெடு விதித்த டிரம்ப்
இந்த புதிய வரி என்பது ஏப்ரல் 10ம் தேதி முதல் அமெரிக்கா பொருட்களுக்கு நடைமுறையில் வரும் என்று சீனா அறிவித்துள்ளது. சீனாவின் இந்த பதிலடி நடவடிக்கையால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எரிச்சல் அடைந்துள்ளார். பொருளாதாரத்தில் இரு பெரும் நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் மோதிக்கொள்வது சர்வதேச அளவில் பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
இதற்கிடையே, சீனா தனது வரி விதிப்பை ஒருநாளைக்குள் திரும்ப பெற வேண்டும் என்று கெடு விதித்துள்ளார். இல்லையென்றால் சீனாவின் இறக்குமதி பொருட்கள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது: - அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்ப பெற ஒருநாள் அவகாசம் கொடுக்கிறேன்.
கூடுதலாக 50 சதவிகித வரி
அதற்குள் சீனா தனது வரிவிதிப்பை திரும்ப பெறாவிட்டல், ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் கூடுதலாக 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் மேலும் கூறுகையில், "சீனா ஏற்கனவே அதிக வரியை விதித்த நிலையில், தற்போது கூடுதலாக 34 சதவீத வரியை விதித்துள்ளது. சீனா நியாயமற்ற வர்த்தக நடைமூறைகளை பின்பற்றுகிறது. சட்ட விரோத மானியம் மற்றும் நாணைய முறைகேடு போன்றவற்றில் ஈடுபடுகிறது.
எந்த ஒரு நாடாக இருந்தாலும் அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு பதிலடி கொடுத்தால் இதற்கு முன்பாக உள்ள வரியை விட இன்னும் கூடுதலாக விதிப்பேன். சீனா தனது வரியை திரும்ப பெறாவிட்டால் அந்த நாட்டுடனான அனைத்து சந்திப்புகளும் நிறுத்தப்படும்" என்று கூறியுள்ளார். அமெரிக்கா - சீனா இடையேயான இந்த வர்த்தக போர் வரும் நாட்களில் இன்னும் தீவிரமாக கூடும் என்றும் இதனால் சர்வதேச அளவில் பெரும் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications