நடுவானில் வெடித்து சிதறும் அமெரிக்க சாட்டிலைட்.. நிலவுக்கு சென்றது திடீரென பூமியை நோக்கி பாய்வது ஏன்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் நிலவு குறித்து அனுப்பிய ராக்கெட் வளிமண்டலத்திலேயே வெடித்துச் சிதறும் என்பதை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
கடந்த நூற்றாண்டில் நிலவு மற்றும் ஸ்பேஸ் குறித்த நாடுகளை அரசு சார்ந்த அமைப்புகளே மேற்கொண்டு வந்தன. ஆனால், இப்போது அந்த நிலை மெல்ல மாறி வருகிறது. தனியார் நிறுவனங்கள் நிலவு குறித்த ஆய்வுகளில் இறங்கியுள்ளனர்.

ஆஸ்ட்ரோபோடிக்: அப்படி அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோபோடிக் என்ற நிறுவனம் நிலவு குறித்து ஆய்வு செய்யக் கடந்த 8ஆம் தேதி வல்கன் ராக்கெட் மூலம் சாட்டிலைட்டை அனுப்பியது. அப்போது முதலே அந்த சாட்டிலைட் நிலை குறித்து ஆஸ்ட்ரோபோடிக் நிறுவனம் தொடர்ச்சியாக அப்பேட்களை பகிர்ந்து வருகிறது.
நிலவுக்கு முதல்முறையாக சாட்டிலைட் அனுப்பிய அமெரிக்காவைச் சேர்ந்த முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையை ஆஸ்ட்ரோபோடிக் நிறுவனம் படைத்தது. இருப்பினும், இது வெற்றிகரமாக இருக்கவில்லை. ராக்கெட்டில் இருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே, விண்கலத்தில் சிறு வெடிப்பு ஏற்பட்டது. அதில் கணிசமான பாகங்களை அது இழந்து இருந்த நிலையில், அந்த சாட்டிலைட்டால் நிலவில் முறையாகத் தரையிறங்க முடியாது என்பது அப்போதே உறுதியானது.
வெடித்துச் சிதறும்: இருந்த போதிலும், நிலவை நோக்கிச் செல்லும் போதே, அது வழக்கமான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. இதற்கிடையே ஆஸ்ட்ரோபோடிக் நிறுவனம் அந்த சாட்டிலைட் குறித்த அப்பேட்களை பகிர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தங்கள் எக்ஸ் பக்கத்தில், "விண்கலம் இப்போது பூமியை நோக்கி வருகிறது. ஆனால், விண்கலத்தால் பூமியில் தரையிறங்க முடியாது. அதற்கு முன்பாகவே அது வளிமண்டலத்தில் எரிந்துவிடும். இப்போது எங்களுக்கு இருக்கும் மற்ற ஆப்ஷன்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்" என்றார்.
என்ன காரணம்: இந்த சாட்டிலைட்ட அனுப்பப்படும் போது அது ராக்கெட்டில் இருந்து பிரிந்ததும் திடீரென சிறு வெடிப்பு ஏற்பட்டது. அந்த வெடிப்பு காரணமாக எரிபொருள் லீக் ஆகியுள்ளது.. அதுவே இந்த பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது. அந்த பெட்டி வடிவில் இருக்கும் ரோபோ இப்போது ஐந்து நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் உள்ளது.. அந்த ரோபோ இப்போது நமது கிரகத்திலிருந்து 390,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
முதலில் நிலவில் ஸ்மூத்தாக தரையிறங்குவதே இதன் இலக்காக இருந்தது. அதன் பிறகு எரிபொருள் லீக் காரணமாகக் குறைந்தது நிலவில் அது மோதியபடி இறங்கும் என்று பலரும் நம்பினர். இருப்பினும், இப்போது அதிலும் பிரச்சினைகள் இருப்பதால் அந்த குறைக்கப்பட்ட இலக்கை கூட அந்த தனியார் நிறுவனத்தின் ராக்கெட்டால் அடைய முடியாது என்பது இப்போது தெளிவாகிறது.
உள்ளே இருப்பது என்ன: அந்த சாட்டிலைட்டில் அறிவியல் ஆராய்ச்சிக்குத் தேவையான பொருளுடன் கூடுதலாக, ஆஸ்ட்ரோபோட்ட் நிறுவனத்தின் பிரைவேட் வாடிக்கையாளரின் பொருட்கள், ஒரு ஸ்போர்ட்ஸ் டிரிங், ஒரு பிட்காயின், மனித மற்றும் விலங்குகளின் சாம்பல் மற்றும் டிஎன்ஏ ஆகியவை இருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் நிலவில் தரையிறங்க முயன்றன. இருப்பினும், அந்த நிறுவனங்களால் வெற்றிகரமாகத் தரையிறங்க முடியவில்லை. இப்போது அந்த லிஸ்டில் அமெரிக்காவின் ஆஸ்ட்ரோபோடிக் நிறுவனம் இணைந்துள்ளது.
கமர்ஷியல் லூனார் பேலோட் சர்வீசஸ் என்ற சோதனைத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவின் நாசா அமைப்பும் தனது ஆய்வுக்குத் தேவையான பொருட்களை ஆஸ்ட்ரோபோட்டிக் நிறுவனத்திடம் கொடுத்து இருந்தது. இதற்காகக் கட்டணமாகவும் நாசா $100 மில்லியனுக்கும் அதிகமான தொகையைச் செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications