இந்திய ஐடி துறைக்கு ஆபத்து.. பழிவாங்க துடிக்கும் டிரம்ப்! புதிய மசோதாவை கொண்டு வருகிறது அமெரிக்கா!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நம்மூரில், வடமாநிலத்திலிருந்து தொழிலாளர்கள் வருவதால்தான் இங்கு தமிழர்களுக்கு வேலையில்லை என்று சொல்வதை போல, இந்தியர்களால்தான் எங்களுக்கு வேலையில்லை என அமெரிக்கர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர். எனவே வெளிநாடுகளில் வேலையை அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனங்களுக்கு வரியை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.

முதலில் அவுட்சோர்ஸ் என்றால் என தெரிந்துக்கொள்வோம். உள்ளூரில் ஆட்கள் கிடைக்கவில்லை என்று வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து வேலை வாங்குவது, அல்லது வேலையை முடித்து தர சொல்லி வெளியூர் ஆட்களிடம் வேலையை ஒப்படைப்பதைத்தான் அவுட்சோர்ஸ் என்று சொல்கிறோம்.

US tax IT

இது உலகம் முழுவதும் இருக்கும் நடைமுறைதான். வடமாநில தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு கிடைப்பதால் அவர்களை நம்மூரில் நாம்தான் இறக்குமதி செய்கிறோம். நாம் எனில் நீங்களும், நானும் கிடையாது. தொழிலை நடத்துகிற முதலாளிகள்தான் இதை செய்கிறார்கள். அதுபோல அமெரிக்க முதலாளிகள், குறைந்த வேலைக்கு ஆட்களை தேடும்போது இந்தியர்கள் கிடைக்கிறார்கள். ஆமாங்க, நம்மாளுங்க குறைந்த கூலிக்கு வேலையை தரமாக முடித்துக்கொடுப்பார்கள்.

கடந்த 30 ஆண்டுகளாக Apple, American Express, Cisco, Citigroup, FedEx மற்றும் Home Depot உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இப்படித்தான் வளர்ந்து இருக்கிறது. ஆனால், இப்போ இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வரி தகராறு போய்க்கொண்டிருக்கிறது. இந்தியாவை வழிக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சிக்கிறது. நாம் பிடி கொடுக்காமல், கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக எஸ்கேப் ஆகி வருகிறோம். எனவே நமக்கு செக் வைக்க, இந்தியாவிலிருந்து ஆட்களை வைத்து வேலையை செய்யும்(அவுட்சோர்ஸ் செய்யும்) அமெரிக்க நிறுவனங்களுக்கு 25% வரியை போடுவோம் என அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது.

இதற்கு HIRE சட்டம் என்று பெயர். இந்த சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி மோரினோ முன்மொழிந்திருக்கிறார். இதன் மீது விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர்தான் சட்டமாக அமலாக்கப்படும்.

இது குறித்து இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் எனில் இந்தியாவிலிருந்து மட்டும் கிடையாது, அமெரிக்க நிறுவனங்கள் வேறு எந்த நாட்டிலிருந்து தொழிலாளர்களை பயன்படுத்தினாலும் இந்த வரி பொருந்தும். ஆனால் ஐடி துறையை பொருத்தவரை இந்தியாதான் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அளவில் சேவையை வழங்கி வருகிறது. அமெரிக்காவுக்கு நாம் ஏற்றுமதி செய்வது ஜவுளியையோ, தங்க நகைகளையோ அல்ல. மாறாக அதைவிட அதிகமாக ஐடி ஊழியர்களைத்தான் ஏற்றுமதி செய்து வருகிறோம்.

TCS, Infosys, Wipro, HCLTech, Cognizant, Tech Mahindra, LTIMindtree, Mphasis உள்ளிட்ட இந்திய நிறுவனங்தான் இந்த பணியை செய்து வருகின்றன. இதுபோன்ற இந்திய ஐடி நிறுவனங்கள் நமது நாட்டின் மொத்த ஜிடிபியில் 7%க்கும் அதிகமாக பங்களிக்கின்றன. இந்த நேரம் பார்த்து, அமெரிக்கா இப்படியொரு வரியை போடும் எனில், அது நிச்சயம் மேற்குறிப்பிட்ட இந்திய ஐடி நிறுவனங்களை பாதித்து, மொத்த ஐடி துறையின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கிவிடும். இது நமது பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் இப்படி வரியை போட்டு அமெரிக்காவால் பொழப்பு நடத்த முடியாது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவுக்கு குறைந்த கூலியில் ஆட்கள் தேவை. அது இந்தியாவிலிருந்து மட்டுமே கிடைக்கும். ஆனால் வரியை போட்டால் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் அமெரிக்கா ஐடி நிறுவனங்கள் சொந்த மக்களை வைத்துதான் வேலை வாங்க வேண்டியிருக்கும். அது ஒன்னும் லேசுபட்ட காரியம் கிடையாது. அமெரிக்கர்கள் தொழிலாளர் உரிமையை விட்டுத்தர மாட்டார்கள்.

மாசம் மாசம் இன்சென்டிவ், சனி, ஞாயிறு லீவு, 8 மணி நேரம் வேலை எனில், 8 மணி நேரம் மட்டும்தான் வேலை பார்ப்பார்கள். இது தவிர இன்சூரன்ஸ், ஆண்டு விடுமுறை, இதர பண பலன்கள், சலுகைகளை கேட்பார்கள். இதே நம்மூர் ஆட்கள் எனில், நட்ட நடு ராத்திரிக்கு போன் செய்து வேலையில் அமர சொன்னால் கூட அமர்வார்கள். எனவே அமெரிக்க ஐடி நிறுவனங்கள் நஷ்டத்தை விரும்பாது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் வரி, சட்டமாக்கப்படாது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+