மோடிக்கு “டென்சன்”.. அதிபர் ஜோ பைடனுக்கு அமெரிக்க செனடர்கள் கடிதம்! இந்தியாவில் மனித உரிமை மீறலாமே
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சென்று இருக்கும் நிலையில், இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவரிடம் பேசும்படி அமெரிக்காவை சேர்ந்த செண்டர்கள் உட்பட 75 காங்கிரஸ் உறுப்பினர்கள் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதி உள்ளார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். செவ்வாய்கிழமை நியூயார்க் நகருக்கு அவர் சென்றடைந்தார். இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு 9 ஆண்டுகளில் 5 முறை அமெரிக்காவுக்கு பயணித்து உள்ளார். ஆனால், அவர் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசுமாறு 75 காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிபர் ஜோ பைடனுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்கள். அமெரிக்க செனடர் கிரிஸ் வான் ஹோலென் மற்றும் அதன் பிரதிநிதி பிரமிளா ஜெயபால் தலைமையிலான குழுவினர் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்கள்.
இதில் 18 செனடர்கள், 57 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடக்கம். குறிப்பாக ஜனநாயக கட்சியின் அதிபர் தேர்தலுக்காக வேட்பாளர் போட்டியில் இருக்கும் பெர்னீ சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரன் ஆகியோரும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டு இருப்பதால் இந்த கடிதம் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.
அவர்கள் எழுதி இருக்கும் கடிதத்தில், "இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவின் நீண்டகால ஆதரவாளர்களான நாங்கள், நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் குறித்தும் நேர்மையான முறையில் விவாதிக்கப்படும் என்று நம்புகிறோம். எனவே இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கவலைக்குரிய பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்புவீர்கள் என நம்புகிறோம்.
அமெரிக்க வெளியுறவுத் துறை கொள்கையின் அடிப்படையில், அதிபர் ஜோ பைடன், மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம், மத சுதந்திரம், பன்முகத்தன்மையை மதிப்பவர் என்று நம்புகிறோம். அதை சர்வதேச அரங்கில் முன்னோக்கி கொண்டு செல்ல, அமெரிக்காவில் பின்பற்றப்படும் கொள்கைகளை நம்முடைய நட்பு நாடுகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.
சுயாதீன, நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களின்படி, இந்தியாவில் அரசியல் சுதந்திரம், மத சகிப்பின்மை, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், பத்திரிகை சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள், இணையதள இணைப்புகள் முடக்கம் போன்றவை தொடர்ந்து வருகின்றன. நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரையும், அரசியல் கட்சியையும் அங்கீகரிக்கவில்லை.
இது இந்திய மக்களின் முடிவாகும். அதே நேரம் நாம் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் கீழ் உள்ள முக்கிய கொள்கைகளுடன் இருக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி உடனான உங்களின் சந்திப்பின்போது இந்த பிரச்சனைகள் தொடர்பாக முழுமையாக விவாதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களின் இந்த சந்திப்பு இரண்டு சிறந்த நாடுகள் இடையே வலுவான, நீண்ட, வெற்றிகரமான உறவை தொடர உதவும்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னதாக இந்தியாவில் நடக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து வெள்ளை மாளிகையில் நடைபெறும் இரவு விருந்தில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திரும்பப்பெற வலியுறுத்தி அந்நாட்டில் இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் என்ற அமைப்பு கையெழுத்து இயக்கத்தை நடத்தியது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications