வடகொரியாவில் நுழைந்து மீனவர்களை கொன்ற அமெரிக்க கடற்படை! நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்
வாஷிங்டன்: கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவுக்கும்-வடகொரியாவுக்கும் இடையே அணு ஆயுதங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நேரத்தில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ரகசிய ஒட்டுக்கேட்பு கருவியை வடகொரியாவுக்குள் பொருத்த ஊடுருவினார்கள் என்றும், அந்த சமயத்தில் வடகொரிய மீனவர்களை கொன்றார்கள் என்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
பெயர் வெளியிடப்படாத சில ஆதாரங்களை மேற்கோள்காட்டி, இந்தச் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது பதவியில் இருக்கும் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆதாரங்கள், இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள விவரங்களை அறிந்தவர்கள் என்றும் இந்த செய்தி ஊடகம் கூறுகிறது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முதன் முறையாக பதவியேற்றபோது இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாக அந்த நியூயார்க் டைம்ஸ் கூறியிருக்கிறது. அப்போது அவர் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்தச் செய்தி குறித்து ட்ரம்பிடம் கேட்டபோது, "இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இப்போழுதுதான் இதை நான் முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன்" என்று நழுவி விட்டார்.
கடற்படை வீரர்கள் இரவில் கரைக்கு வந்து இறங்கும்போது, கடல் உணவுக்காக வந்த மீனவர்களை எதிர்பாராத விதமாக அவர்களை எதிர்கொண்டதாக தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது. அமெரிக்கப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தி, அந்தச் சிறிய மீன்பிடிப் படகில் இருந்த அனைவரையும் கொன்றதாக அந்த அறிக்கை கூறியது. பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை.
பின்னாளில் நடந்த ஒரு இரகசிய பென்டகன் மதிப்பாய்வு, இந்த கொலைகள் போர் விதிகள்படி நியாயப்படுத்தப்பட்டவை என்று முடிவுக்கு வந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கக் கோரியதற்கு பென்டகன் இன்னும் பதிலளிக்கவில்லை.
அமெரிக்க புலனாய்வுக் குழுவில் உள்ள ஜனநாயகக் கட்சியான அமெரிக்க செனட்டர் மார்க் வார்னர், தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் உள்ள எந்தவொரு தகவலையும் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது என்று கூறியுள்ளார். அப்படியெனில் உண்மையிலேயே இந்த படுகொலையை அமெரிக்கா செய்ததா? என்று கேள்வி எழுகிறது.
-
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications