நடுங்க வைக்கும் சம்பவம்! அமெரிக்காவில் சூப்பர் பவுல் வெற்றி பேரணியில் துப்பாக்கி சூடு! பகீர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற சூப்பர் பவுல் வெற்றி பேரணியில் திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
நம்ம ஊரில் எப்படி ஐபிஎல் போட்டிகள் நடக்கிறதோ அதேபோல அமெரிக்காவில் ரக்பி லீக் போட்டிகள் நடக்கிறது. அங்கே இரண்டு லீக் போட்டிகள் ரொம்பவே புகழ் பெற்றவை. அந்த இரண்டு லீக்கிலும் வெல்லும் அணிகள் மோதிக்கொள்ளும். இதை அங்கே சூப்பர் பவுல் போட்டி என்று அழைக்கிறார்கள்.

அமெரிக்காவில் நடக்கும் மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதைப் பார்க்கவே அங்கே பல கோடி அமெரிக்க மக்கள் காத்துக் கிடப்பார்கள். அதன்படி இந்தாண்டு சூப்பர் அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
துப்பாக்கி சூடு: இந்த அங்கே சூப்பர் பவுல் ரக்பி விளையாட்டுப் போட்டியில் கலிபோன்ரியா அணியை கன்சாஸ் சிட்டி அணி வீழ்த்தியது. இதைக் கொண்டாடும் வகையில் கன்சாஸ் நகரில் சூப்பர் பவுல் வெற்றிப் பேரணி நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த பேரணியில் திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பேரணியாகச் சென்ற அந்த மக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், பல குழந்தைகள் உட்பட 21 பேர் படுகாயமடைந்தனர். இதில் காயமடைந்த குழந்தைகளில் சிலர் கன்சாஸ் நகரில் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 11 குழந்தைகளுக்குச் சிகிச்சை தரப்பட்டு வரும் நிலையில், அவர்களில் ஒன்பது பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.
படுகாயம்: இருப்பினும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிருக்கும் ஆபத்தான வகையில் காயமடைந்துள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக கன்சாஸ் நகரத் தீயணைப்புத் துறைத் தலைவர் ரோஸ் கிரண்டிசன் கூறுகையில், "15க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான சூழலில் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரைத் துப்பாக்கிகளை வாங்க இந்தியாவைப் போலக் கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை. மிக எளிதாக யார் வேண்டுமானாலும் துப்பாக்கிகளை வாங்க முடியும். இதன் காரணமாகவே இதுபோல அடிக்கடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அமெரிக்காவில் துப்பாக்கிகளை வாங்கச் சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து அதிகரித்தாலும் கூடத் துப்பாக்கிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இதுபோன்ற சட்டங்கள் வராமல் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்?












Click it and Unblock the Notifications