"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்புத் துறை இந்தியர்களைக் குறிவைக்கும் வகையில் போஸ்ட் ஒன்றைப் போட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள இந்தியர்கள் வெளியேறினால் அவர்களுக்கு பொது மன்னிப்பும், ஊக்கத்தொகையும் வழங்குவோம் என்பது போலப் பதிவிட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் கணிசமான அளவுக்கு இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு வசிக்கும் பெரும்பாலான இந்தியர்கள் நல்ல சம்பளத்தில் வேலை செய்யும் ஐடி ஊழியர்கள் தான். ஆனால், அதைத் தாண்டி சமீப ஆண்டுகளில் சட்டவிரோதமாக அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் திட்டம்
அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு, இதுபோல சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. ட்ரம்ப் அரசின் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தோர் நாட்டை விட்டு வெளியேறத் தானாக முன்வரும்போது அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது
அதாவது சட்டவிரோத குடியேறி ஒருவர் தானாக வெளியேற முன்வரும்போது அவர்கள் தாயகம் செல்ல விமான டிக்கெட் இலவசமாக வழங்கப்படுமாம். மேலும், சட்டவிரோதமாக நுழைந்ததற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது. மேலும், 2600 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.40 லட்சம் போனஸாகவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை
இதில் இப்போது சர்ச்சை என்னவென்றால் இந்தியர்களைக் குறிவைக்கும் வகையில் டிரம்ப் நிர்வாகம் இது தொடர்பான போஸ்ட்டை போட்டுள்ளது. ஒப்பீட்டளவில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைவு. அப்படியிருக்கும்போது, இந்தியர்களைக் குறிவைக்கும் வகையில் டிரம்ப் நிர்வாகம் போஸ்ட்டை பகிர்ந்துள்ளதே சர்ச்சையாக மாறியுள்ளது.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடம் CBP ஹோம் என்ற செயலி உள்ள நிலையில், அதில் இருந்து இந்தத் திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக 2வது முறையாக டிரம்ப் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்தபோது, அதாவது 2026 ஜனவரி 21ல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. முதலில் இத்திட்டத்திற்கான ஊக்கத்தொகை $1,000ஆக இருந்த சூழலில், இப்போது அது $2,600ஆக உயர்த்தப்பட்டுள்ளது.. தானாக முன்வந்து வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளை இது ஊக்குவிப்பதாக இருக்கிறது.
அமெரிக்காவுக்கும் லாபம்
அமெரிக்கா மக்கள் தரும் மிகச் சிறந்த டீல் இது என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிரிஸ்டி நோம் தெரிவித்துள்ளார். மேலும், இது அமெரிக்காவுக்கும் கூட நன்மையைக் கொடுப்பதாகவே இருக்கிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் விமான டிக்கெட் ஊக்கத்தொகை என அனைத்தையும் சேர்த்தாலும் கூட அமெரிக்காவுக்கு அதிகபட்சமே 5000 டாலர் தான் செலவாகும். ஆனால், அமெரிக்க அதிகாரிகள் சட்டவிரோத குடியேறியைப் பிடித்து, வெளியேற்றினால் $18,000 வரை செலவாகும். அதாவது இத்திட்டத்தின் மூலம் ஒருவருக்கு $13,000க்கும் மேல் அமெரிக்கா சேமிக்கிறது.
கடந்த 2025ல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது முதல் சுமார் 22 லட்சம் பேர் தானாக முன்வந்து வெளியேறி உள்ளனராம். இதன் மூலம் அமெரிக்காவுக்கு $1.4 பில்லியன் வரை செலவினங்களைக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதரவும் எதிர்ப்பும்!
அனைத்து சட்டவிரோத குடியேறிகளும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்ற போதிலும், விசா காலம் முடிந்த பிறகும் தங்குவோர், நாடுகடத்த இறுதி உத்தரவு பெற்றவர்களுக்கு இதில் முன்னுரிமை தரப்படும். இதற்கு விண்ணப்பிப்போருக்கு முதலில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும். பிறகு, அவர்கள் எந்த நாட்டில் குடியுரிமை இருக்கிறதோ.. அந்த நாடுகளுக்குத் திரும்புவதை நிரூபிக்க வேண்டும். அப்படிச் செல்லும்போது, இலவச விமான டிக்கெட் மற்றும் $2,600 ஊக்கத் தொகை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது பரவலாக வரவேற்பைப் பெற்றாலும் கூட அங்கு இதற்குக் கணிசமாக எதிர்ப்புகளும் கிளம்பியே இருக்கிறது. அதாவது சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தவர்களை வெளியேற்ற வேண்டுமே தவிர இதுபோல பணத்தைக் கொடுத்து வெளியே போகச் சொல்லிக் கேட்கக்கூடாது. பொது மன்னிப்பு கூட ஓகே, ஆனால் ஊக்கத்தொகை எல்லாம் ஓவர் என்பது இவர்கள் வாதம். ஆனால், சோதனை நடத்தி வெளியேற்றுவதை விட இதில் செலவு மிகக் குறைவு என்கிறார்கள் இதன் ஆதரவாளர்கள்.
-
"இனி அமெரிக்காவுக்கு நேட்டோ தேவையில்லை.." கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென ஆவேசமாக பாய்ந்தார் -
மனசாட்சி இடம் கொடுக்கல.. ஈரான் போரால் டிரம்புக்கு எகிறும் பிரஷர்.. அமெரிக்க டாப் அதிகாரி ரஜினாமா -
கண்ணை உறுத்துது டிரம்புக்கு..ஈரானின் இதயத்தை குறி வைக்கும் அமெரிக்கா! கார்க் தீவு மட்டும் பறிபோனால்? -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
சண்டைக்கு மட்டும் வாங்க.. சமாதானத்துக்கு வாய்ப்பே இல்லை! ட்ரம்பை லெஃப்ட் ஹேண்ட்டில் டீல் செய்யும் ஈரான்! -
விஷயம் ரொம்ப தீவிரமாகுது! டிரம்ப் பேச்சை கேட்டு.. ஈரான் மேட்டரில் நுழையும் பிரிட்டன்! -
கெஞ்சாத குறையாக கேட்ட டிரம்ப்.. மதிக்காத ஐரோப்பிய நாடுகள்.. ஈரான் போரில் தலையிட மறுப்பது ஏன்? -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்? -
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்! -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு












Click it and Unblock the Notifications