டொனால்டு டிரம்ப் விதித்த கூடுதல் வரிகள் ரத்து.. அமெரிக்கா உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!
வாஷிங்டன்: சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தை மீறி சிறப்பு அதிகாரம் மூலமாக டிரம்ப் கூடுதல் இறக்குமதி வரியை விதித்திருந்தார். தற்போது இந்த வரி சட்டவிரோதம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தடை விதித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்புக்கு வந்த பின், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய அவசர சட்டத்தின் கீழ் ரெசிப்ரோக்கல் வரிகள் கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் பாதிப்புகளை சந்தித்தது. இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் மீது வர்த்தக பற்றாக்குறையை காரணமாக கூறி வரிகளை விதித்தார். இதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் அமெரிக்கா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்தன. இந்த நிலையில் அமெரிக்கா உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதன்படி 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் 6 பேர் டிரம்ப் உத்தரவுக்கு எதிராகவும், 3 நீதிபதிகள் டிரம்ப் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.
இதனால் 6 - 3 என்ற வாக்கெடுப்பில் கீழ் அதிபர் டிரம்ப் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா கீழமை நீதிமன்றம் டிரம்ப் விதித்த ரெசிப்ரோக்கல் வரிகள் அனைத்து சட்டவிரோதமானவதை என்று கூறி தீர்ப்பு அளித்திருந்தது. தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு டொனால்டு டிரம்ப்க்கு பேரிடியாக அமைந்துள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு டிரம்ப் விதித்த மற்ற வரிகளை பாதிக்காது என்றும், அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட வரிகளை மட்டுமே ரத்து செய்யும் என்று கூறப்படுகிறது. நீதிபதிகள் தங்களின் உத்தரவில், அமெரிக்கா சட்டமான சர்வதேச அவசர நிலை பொருளாதார சட்டத்தின்படி வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம் இல்லை.
அமெரிக்கா சட்டப்படி வரி விதிக்க நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஸ்டீல், அலுமினியம் போன்ற துறை சார்ந்த வரிகளை பாதிக்காது என்றும் தெரிகிறது. இதனால் டிரம்ப் அடுத்தக் கட்டமாக என்ன செய்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications