Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி அமெரிக்காவில் திருமணத்திற்கு பிறகு கிரீன் கார்டு வாங்குவது ஈஸி இல்லை! பெரிய ஆப்பாக வைத்த டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கி வேலை செய்ய வெளிநாட்டினருக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. அமெரிக்க நாட்டினர் அல்லது ஏற்கனவே கிரீன் கார்டு வைத்திருப்போரைத் திருமணம் செய்யும்போது வெளிநாட்டினருக்கும் கிரீன் கார்டு தரப்படுகிறது. இதைத் திருமணத்தின் அடிப்படையிலான கிரீன் கார்டு என்கிறார்கள். இதற்கிடையே இந்த திருமணம் அடிப்படையிலான கிரீன் கார்டிற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக அமெரிக்கா செல்கிறார்கள். இதுபோல உரிய விசா பெற்று அமெரிக்கா செல்வோர் அனைவரும் எப்படியாவது கீரன் கார்டு பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இதற்காக அவர்கள் பல மாதங்கள் வரை கூட விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்க வேண்டும்.

US Tightens Green Card Rules Marriage-based green cards are now very tough to get

அமெரிக்க அதிகாரிகள்

பொதுவாக அமெரிக்காவில் குடிவரவு சார்ந்த நடவடிக்கை அனைத்தையும் USCIS எனப்படும் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை மையம் தான் கண்காணித்து வருகிறது. இதற்கிடையே திருமண அடிப்படையில் கிரீன் கார்டு வழங்கும் செயல்முறையில் USCIS அமைப்பு இப்போது குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

அதாவது அமெரிக்க குடிமக்கள் அல்லது கிரீன் கார்டு வைத்திருப்போரை வேறு நாட்டினர் திருமணம் செய்து கொண்டால்.. அதன் அடிப்படையில் கிரீன் கார்டு வழங்கப்படும். ஆனால், பலரும் போலியாக கிரீன் கார்டுகளை பெறுவதாகவும் இதில் மோசடி நடப்பதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், USCIS அமைப்பு இந்த நடைமுறையில் விதிகளைக் கடுமையாக்கியுள்ளது. விண்ணப்பப் படிவங்களில் கடுமையான கேள்விகள், அதிக கட்டணம் என்று பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, புதிதாக விண்ணப்பிப்போர் இது குறித்துத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள்

முதற்கட்டமாகத் திருமணம் அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பிக்க இருக்கும் படிவம் I-130 (வெளிநாட்டு உறவினருக்கான விண்ணப்பம்) மற்றும் படிவம் I-485 (அமெரிக்காவில் தங்க அனுமதி கோரும் படிவம்) ஆகிய விண்ணப்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. எனவே, புதிதாக விண்ணப்பிப்போர் புதிய படிவங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பழைய படிவத்தை வைத்து விண்ணப்பிப்போரின் படிவங்கள் நிராகரிக்கப்படும். மேலும், கட்டணமும் தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப உயர்த்தப்பட்டுள்ளது

அதிக காலம்

எல்வாற்றையும் சரியாக விண்ணப்பித்தாலும் கூட திருமண அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்கள் பிராசஸ் ஆக அதிக காலம் எடுத்துக் கொள்ளுமாம். பயோமெட்ரிக்ஸ் பதிவு செய்யும் முறை, நேர்காணல்கள் மற்றும் இறுதி ஒப்புதல் என அனைத்திலும் தாமதம் இருக்கும். விரிவான பாதுகாப்பு மற்றும் முறையான விசாரணையை உறுதி செய்யவே காலக்கெடு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தாமதமும் தவிர்க்க முடியாத ஒன்றாகி இருப்பதாகவும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே, அதற்கேற்ப திட்டமிடவும் விண்ணப்பித்த பிறகு பொறுமையாகக் காத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

US Tightens Green Card Rules Marriage-based green cards are now very tough to get

தீவிரமான சோதனை

மேலும், மோசடி திருமணங்கள் மூலம் போலியாக கிரீன் கார்டு பெறுவதைத் தடுக்க திருமணங்களின் சட்டப்பூர்வத்தன்மை குறித்த ஆய்வுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்த ஜாயிண்ட் வங்கி கணக்கை வைத்துள்ளனரா, இணைந்து வாழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா, நேர்காணல்களில் என்ன பதில் சொல்கிறார்கள் என அனைத்தையும் தீவிரமாக விசாரிக்க அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இது மட்டுமின்றி கூடுதல் ஆதாரம் பெறும் விசாரணைகளை முன்பைவிட பல மடங்கு அதிகமாகிவிட்டதாம். சில நேரங்களில் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென அதிகாரிகள் வீட்டிற்கே கூட விசாரணைக்கு வந்துவிடுவதாகச் சிலர் கூறுகிறார்கள். மேலும், குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களிடமும் விசாரணை நடப்பதாகவும் கூறுகிறார்கள். இருவரும் நிஜமாகவே திருமணம் செய்து ஒன்றாக வாழ உள்ளனர் என்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகளை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓராண்டிற்கு மேல் ஆகும்

இந்த பிராசஸில் முக்கிய ஸ்டெப்களாக உள்ள வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் (EAD) மற்றும் அட்வான்ஸ்டு பரோல் பெற இப்போது மக்கள் 8 முதல் 14 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. மேலும், திருமணம் மூலம் கிரீன் கார்டு பெற விண்ணப்பிப்போர், ஒப்புதல் கிடைக்கும் வரை அமெரிக்காவில் எந்தவொரு வேலையும் செய்யக்கூடாது. மேலும், வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடாது. ஆனால், அதிக தாமதம் ஆகிறது.. இவ்வளவு காலம் வெயிட் செய்ய முடியாது என்பவர்கள் தங்கள் நாட்டுத் தூதரகத்துடன் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கலாம். ஆனால், இதில் ரிஸ்க் அதிகம் இருக்கிறது என்பதால் கவனம் தேவை

US Tightens Green Card Rules Marriage-based green cards are now very tough to get

கவனிக்க வேண்டியவை

முதலில் எப்போதும் புதிய படிவங்களைச் சமர்ப்பிக்கவும்.. குடிவரவு நிர்வாகம் தங்கள் படிவங்களை மாற்றியுள்ளன. எனவே, அவர்களின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று புதிய படிவங்களை டவுன்லோடு செய்யுங்கள். அதைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பழைய ஆவணங்களைச் சமர்ப்பித்தால் தேவையில்லாமல் தாமதம் ஆகும். எனவே, அதில் கவனம் தேவை.

கையில் எப்போதும் விரிவான ஆவணங்களை வைத்திருங்கள்.. டிரம்ப் நிர்வாகம் இப்போது திருமண நம்பகத்தன்மையை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இதனால் வங்கியில் ஜாயிண்ட் கணக்கு, ஒன்றாகப் போட்ட குத்தகை ஒப்பந்தங்கள், போட்டோக்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் ஆகியவற்றைத் தயாராக வைத்திருங்கள்.

என்னதான் நீங்கள் எல்லா டாக்குமெண்டுகளையும் நிரப்பிக் கொடுத்தாலும் கூட நிச்சயம் தாமதம் ஏற்படும். எனவே, விண்ணப்பிக்கும்போதே அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும், தற்போது நடைமுறைகள் கடுமையாகி கெடுபிடிகள் அதிகரித்துவிட்டதால் நீங்களே அனைத்தையும் செய்தால் குழப்பமும் தாமதமும் அதிகரிக்கவே செய்யும். எனவே, ஒரு வழக்கறிஞர் மூலம் அனைத்து பணிகளையும் செய்யுங்கள். அது பிராசஸை எளிமையாக்கும்.

கிரீன் கார்டு வாங்கிய பிறகு

எல்லாம் ஓகே.. கிரீன் கார்டும் வாங்கியாச்சு.. இனி பிரச்சினை இருக்காது என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், டிரம்ப் நிர்வாகம் வந்த பிறகு அந்த நிலையும் மாறியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு தான் கிரீன் கார்டு வைத்திருப்பதால் மட்டும் ஒருவரால் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்கிவிட முடியாது என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் கூறியிருந்தார். அவர் சொன்னது முதலே கிரீன் கார்டு வைத்திருப்போருக்கு எதிரான கெடுபிடிகளும் அதிகரித்துவிட்டது.

அதாவது வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பும் நபர்களை கிரீன் கார் சரண்டர் செய்ய அழுத்தம் தரப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்களாம். கிரீன் கார்டு வாங்குவோர் தானாக முன்வந்து மட்டுமே கிரீன் கார்டை சரண்டர் செய்ய முடியும். ஆனால், அமெரிக்க அதிகாரிகளே வெளிநாட்டிற்குச் சென்று திரும்புவோருக்கு அழுத்தம் கொடுக்கிறார்களாம். எனவே, வெளிநாடு செல்லும் முன்பு ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிக்குமாறு அமெரிக்க வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+