ஓடவும் முடியாது.. ஒளியுவும் முடியாது.. விசா விவகாரத்தில் அமெரிக்கா அடுத்த அதிரடி
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்காவில் மற்ற நாட்டினருக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக புகார் உள்ளது. இந்நிலையில் விசா மற்றும் குடியுரிமைக்கு சமூகவலைதளங்களில் குறிப்பிட்ட பதிவுகளை போடக்கூடாது. அப்படி செய்தால் உங்களுக்கான விசா ரத்து செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிர்ச்சிகளும், சர்ச்சைகளும் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. சட்டவிரோத குடியமர்ந்தவர்களை வெளியேற்றிய டிரம்ப் நிர்வாகம், தற்போது அமெரிக்காவில் கல்வி படிக்கும் வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் பிரிவு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உங்கள் சமூகவலை பதிவுகளால் உங்களின் அமெரிக்கா விசாவை நிராகரிக்கவோ அல்லது திரும்பப் பெறவோ முடியும்." என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உலகளவு மீண்டும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிவிப்பில், "உங்களின் சமூகவலைதள கணக்குகளை தீவிரமாக கண்காணிப்போம். யூதர்களுக்கு எதிராகவும், அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தை விமர்சிப்பவர்களுக்கும் விசா மற்றும் குடியிருப்பதற்கான அனுமதி மறுக்கப்படும்."என்று அமெரிக்கா பொது விவகாரத்துறை துணை செயலாளர் ட்ரிசியா மெக்லாஃப்லின் தெரிவித்துள்ளார்.
மேலும் ட்ரிசியா மெக்லாஃப்லின், "உலகில் உள்ள எந்த தீவிரவாத இயக்கங்களுக்கும் அமெரிக்காவில் இடமில்லை. அவர்களுக்கு விசாவோ, க்ரீன் கார்டோ அனுமதிக்க இயலாது. யூத எதிர்ப்பு என்று சமூகவலைதளங்களில் செய்யப்படும் பதிவுகள், அமெரிக்காவால் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸ், லெபனான் ஹிஸ்புல்லா, ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆகியோருக்கு ஆதரவான பதிவை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
இவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள், தீவிரவாதத்துக்கு ஆதரவாக இருப்பவர்கள் என்ற நிலையில் உறுதியாக இருக்கிறோம். எனவே சமூக வலைதளங்களில் யூத எதிர்ப்பு, யூத எதிர்ப்பு தீவிரவாதிகளுக்கு ஆதரவு உள்ளிட்ட யூதத்துக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முறை உடனடியாக அமலுக்கு வருகிறது.
இது அமெரிக்காவுக்கு கல்விக்காக வரும் மாணவர்களுக்கான விசா மற்றும் க்ரீன் கார்டு சேவைகளுக்கும் பொருந்தும். " என்று கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த சில வாரங்களாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், நூற்றுக்கணக்கான மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிட்டனர்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 300 பேரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடர்ந்து பாய்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க குடிமக்களாக இல்லாதவர்களுக்கு, அமெரிக்க குடிமக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் பொருந்தாது. விசா வழங்குவதையோ, மறுப்பதையோ நீதிபதிகள் அல்ல.. நாங்கள் தான் முடிவு செய்வோம்." என்று கூறியுள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications