க்ரீன் கார்டு இருந்தாலும் கூட சிக்கல் தான்.. அமெரிக்காவிலிருந்து கிளம்பும் முன்பு 2 தடவை யோசியுங்க
வாஷிங்டன்: டிரம்ப் நிர்வாகம் புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமின்றி உரிய விசா வைத்திருப்போர் மீதும் கெடுபிடிகளை அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஒருவர் ஹெச் 1பி விசாவை வைத்திருந்தால் கூட அமெரிக்காவில் இருந்து தற்காலிகமாகக் கிளம்பும்போது ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்கிறார்கள் அமெரிக்க வழக்கறிஞர்கள். இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பேன் என்று சொல்லியே ஆட்சியைப் பிடித்தார். சொன்னது போலச் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்தார். ஆனால், இப்போது சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களுக்கு எதிராகவும் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

டிரம்ப் அரசு
குறிப்பாக அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்கள் மற்றும் சட்டப்பூர்வமாகப் புலம்பெயர்ந்தோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உரிய விசா வைத்திருந்தாலும் அவர்கள் அமெரிக்காவில் வசிப்பதில் சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவை விட்டு வெளிநாட்டிற்குப் பயணம் செய்வதாகு முன்பு கிரீன் கார்டு மற்றும் விசா வைத்திருப்போர் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டும் என அந்நாட்டு வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக ஓஹியோ மாநில பல்கலைக்கழக சட்டக் கல்லூரியின் சீசர் குவாஹ்டெமோக் கார்சியா மேலும் கூறுகையில், "அமெரிக்கக் குடியுரிமை இருந்தால் பிரச்சினை இல்லை. ஒருவேளை உங்களிடம் அமெரிக்கக் குடியுரிமை இல்லை என்றால் அமெரிக்காவை விட்டு வெளியே பயணிப்பது குறித்து ஒருமுறைக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுங்கள்.
கவனம் தேவை
குறிப்பாக நீங்கள் டிரம்ப் நிர்வாகம் குறித்து சமூக வலைத்தளத்தில் எதாவது போஸ்ட் செய்திருந்தால் கூடுதல் கவனம் தேவை. சிறிய தவறுக்கு போலீசாரிடம் சிக்கியிருந்தாலும் பிரச்சினை தான். இவர்கள் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டு அமெரிக்கா திரும்பும்போது குடியேற்ற அதிகாரிகளிடம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்" என்றார். சட்டத்தை மீறாதவர்கள் எந்தவொரு சிக்கலையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என அமெரிக்க அதிகாரிகள் கூறினாலும், எதார்த்தம் அதற்கு மாறாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே கார்சியா இந்த எச்சரிக்கையை கொடுத்துள்ளார்.
எதுவாக இருந்தாலும் யோசியுங்கள்
அமெரிக்கக் குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஊடக பிரிவு தலைவரான ஷானன் ஷெப்பர்ட் இது குறித்துக் கூறுகையில், "கிரீன் கார்டு அல்லது விசா என எது வைத்திருந்தாலும் நீங்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி இருந்தால்.. மீண்டும் செல்லும் போது உங்களுக்கு நிச்சயம் அனுமதி கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது.. இப்போது என்று இல்லை கடந்த காலங்களிலும் இதே ரூல்ஸ் தான் இருந்துள்ளது. மீண்டும் வரும்போது அனுமதி கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை
அதேநேரம் இப்போது இதில் நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. முன்பு சிறு விஷயங்களுக்கு எல்லாம் அனுமதி தரப்படும். ஆனால், இப்போது அதற்கெல்லாம் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. சில சூழல்களில் அனுமதியை நிராகரிப்பது மட்டுமின்றி கைது நடவடிக்கையும் இருக்கிறது. இதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.
தேவையான ஆவணங்கள்
சரியான ஆவணங்களை வைத்திருப்பது தான் மிக முக்கியமானது என்கிறார்கள் வல்லுநர்கள். கிரீன் கார்டு வைத்திருப்போர் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் கிரீன் கார்டு வேலிடிட்டி சரியாக இருப்பது முக்கியம் என்கிறார்கள் வல்லுநர்கள். ஒருவேளை கிரீன் கார்டை புதுப்பிக்க வேண்டி இருந்தால் அமெரிக்கக் குடியுரிமை மையத்தில் இருந்து அதற்கான ரசீதை வாங்க வேண்டும் என்கிறார்கள்.
இப்போது நாட்டை விட்டு வெளியே சென்றவர்களின் அனுமதியை மறுக்க எல்லா காரணங்களையும் அமெரிக்கா தேடுவதாக ஷெப்பர்ட் கூறுகிறார். கடந்த காலங்களில் எதாவது தண்டனை பெற்று இருந்தால் அல்லது சிறிய விதி மீறல்கள் செய்தாலும் அனுமதி மறுக்கப்படலாம். மேலும், டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பது அல்லது டிரம்ப் நிர்வாகம் குறித்த மெசேஜ் கூட சிக்கலை ஏற்படுத்தக் காரணமாக இருக்கலாம் என்கிறார் ஷெப்பர்ட்.
இந்த டாக்குமெண்ட் முக்கியம்
பொதுவாக அமெரிக்காவில் ஒருவர் ஹெச் 1 பி அல்லது வேறு ஒரு விசாவில் இருந்து கிரீன் கார்டு பெற விண்ணப்பித்தால்.. அது பிராசஸ் ஆக குறிப்பிட்ட காலம் ஆகும். இதை AoS (Adjustment of Status) என்பார்கள். இதுபோல Adjustment of Status நிலையில் இருப்போர் பொதுவாக முன்கூட்டியே அனுமதி வாங்காமல் நாட்டை விட்டு வெளியேற முடியாது. இந்த ஆவணத்தை USCIS அமைப்பு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications