ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்காது! அமெரிக்கா vs ஈரான் போர் வெடித்தால் வெல்வது யார்? ராணுவ பலம் ஒப்பீடு
வாஷிங்டன்: அமெரிக்கா ஈரான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழலே இருந்து வருகிறது. ஒருவேளை இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தால் எந்த நடக்கும்.. இரு நாடுகளுக்கும் இருக்கும் ராணுவ பலம் என்ன.. இரு நாடுகளில் யார் வெல்லும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில காலமாகவே தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்தாலும் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை அங்குத் தொடர்ந்து அனுப்பி வருகிறது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடித்தால் என்ன நடக்கும் எனப் பார்க்கலாம்.

நிதி
உலகில் எந்தவொரு நாட்டையும் காட்டிலும் அமெரிக்கா தான் ராணுவத்திற்கு அதிக நிதியை ஒதுக்குகிறது.அமெரிக்கா 895 பில்லியன் டாலருக்கும் அதிகமான பாதுகாப்பு பட்ஜெட்டுடன் முதலிடம் வகிக்கிறது. இது பல நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபியை காட்டிலும் அதிகமாகும். மறுபுறம் ஈரான் சுமார் 15 பில்லியன் டாலருடன் 16வது இடத்தில் இருக்கிறது.. அதாவது ராணுவ நிதியில் ஈரானைக் காட்டிலும் சுமார் 60 மடங்கு அதிக நிதியை அமெரிக்கா ஒதுக்குகிறது.
முப்படைகள்
அமெரிக்க ராணுவத்தில் சுமார் 1.3 மில்லியன் வீரர்கள் உள்ளனர். மறுபுறம் ஈரானிடம் 610,000 வீரர்கள் மட்டுமே உள்ளனர். இருப்பினும், பசிஜ் மற்றும் புரட்சிகரப் படைகள் என வலுவான துணை ராணுவப் படையை ஈரான் கொண்டுள்ளது. இதனால் ஈரானின் ஒட்டுமொத்த ராணுவ பலம் அமெரிக்காவுக்கு மிக நெருக்கமாகவே இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
உலகின் மிகவும் நவீனமான விமானப்படைகளில் அமெரிக்காவும் ஒன்று! F-22 மற்றும் F-35 போன்ற 5ஆம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்கள் என 13,000-க்கும் மேற்பட்ட ராணுவ விமானங்களை அமெரிக்கா கொண்டு இருக்கிறது. மறுபுறம் ஈரானின் விமானப்படை மிகவும் சிறியதாக இருக்கிறது. வெறும் 560 விமானங்களை மட்டுமே கொண்டுள்ளது. அதுவும் பழைய தொழில்நுட்பத்தில் இயங்கும் விமானங்களாகவே உள்ளன.
உலகின் 2வது மிகப் பெரிய கடற்படையைக் கொண்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. 11 விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் 81 டெஸ்ட்ராயர் கப்பல்களுடன் அமெரிக்கா இருக்கிறது. ஈரானும் கூட பாரசீக வளைகுடா பகுதியில் ஓரளவுக்கு நல்ல கடற்படையைக் கொண்டதாகவே இருக்கிறது. நீர்மூழ்கிக் கப்பல்கள், கண்ணிவெடி கப்பல்கள், ஆயுதம் தாங்கிய அதிவேகப் படகுகளை ஈரான் கொண்டுள்ளது.
ஏவுகணைகள்
ஒட்டுமொத்தமாக அனைத்து வகை ஏவுகணைகளையும் சேர்த்தால் அமெரிக்காவிடம் சுமார் 25,000 முதல் 30,000 வரையிலான ஏவுகணைகளை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கில் உள்ள ஈரான் வசம் 3,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இருக்கும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கடைசி இந்த இரு பாயிண்டுகள் தான் ரொம்பவே முக்கியம். அதில் முதலாவது அணு ஆயுதங்கள்.. அணு ஆயுதங்களை முதலில் தயாரித்த நாடாக அமெரிக்கா இருக்கிறது. சுமார் 5177 அணு ஆயுதங்களை அமெரிக்கா கொண்டுள்ளது. ஈரான் வசம் இப்போது வரை எந்தவொரு அணு ஆயுதங்களும் இல்லை. ஆனால், அணு ஆயுதங்களுக்கு ஏற்றபடி யுரேனியத்தை உற்பத்தி செய்யும் பணிகளில் அது தீவிரமாக உள்ளது. தற்போதைய பிரச்சனைக்கும் கூட அதுவே மேஜர் காரணம்!
ஒரு நாள் கூட தாங்காது
அடுத்த இரண்டாவது விஷயம் உலக நாடுகளுடன் இருக்கும் தொடர்பு! போர் வெடிக்கும்போது அமெரிக்காவுக்கு ஆதரவாக உலக நாடுகள் திரளும். குறிப்பாக நேட்டோ நாடுகள் அமெரிக்காவுக்காகக் களமிறங்கும். ஏனென்றால் நேட்டோ நாட்டில் ஒரு நாடு மீது தாக்குதல் நடத்தினால் மற்ற நாடுகளும் வர வேண்டும் என்பதால் அமெரிக்காவுக்கு ஆதரவாகப் பெரும்படை திரளும். மறுபுறம் ஈரானுக்கு ஆதரவாக ஈராக், சிரியா, லெபனான், ஏமன் சில நாடுகள் மட்டுமே வரும்.
இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முழு வீச்சில் போர் வெடித்து, எல்லா நாடுகளும் உள்ளே வந்தால் ஈரானால் ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாது.












Click it and Unblock the Notifications