சூப்பர்! அமெரிக்கா செல்வோருக்கு ஜாக்பாட்.! விசா நடைமுறையில் தளர்வுகள்.. எப்போது வரை இருக்கும்?
வாஷிங்டன்: அமெரிக்கச் செல்லும் இந்தியர்களுக்கு நற்செய்தியாக விசா தொடர்பாக அமெரிக்க அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஐடி துறையில் இந்தியர்கள் சிறந்து விளங்குவதால், அவர்களை அமெரிக்கா அப்படியே அள்ளிக்கொள்கிறது.
இந்தச் சூழலில் வரும் டிச. 31ஆம் தேதி வரை மாணவர்கள் உள்ளிட்ட சில தரப்பினருக்கு விசா வழங்கும் முறைகளில் அமெரிக்க சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

தளர்வுகள்
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விசா கோரி விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தேவையில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விசா விண்ணப்பதாரர்களுக்கு இது மிகவும் அவசியமான ஒன்று என்றும் இது எந்தவொரு கவலையின்றி இந்தியர்கள் அமெரிக்கா வர உதவும் என்றும் தெற்காசிய மக்களுக்கான ஜோ பைடனின் ஆலோசகர் அஜய் ஜெயின் பூடோரியா தெரிவித்துள்ளார்.

யாருக்கு
இதன் மூலம் மாணவர்கள், ஊழியர்கள், தூதரக பணி நிமித்தமாக அமெரிக்கா செல்லும் பணியாளர்களுக்கு விசா நேர்காணல் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிற்கு மாணவர்கள் (F, M, மற்றும் கல்வி J விசா கோரி விண்ணப்பித்தவர்கள்), பணியாளர்கள் (H-1, H-2, H-3, தனிப்பட்ட L விசாக்கள்), கலாசரம் விசா (O, P, மற்றும் Q விசாக்கள்) கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்குப் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்
அதேநேரம் இதற்கு சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்பிட்ட பிரிவுகளில் விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், முந்தைய காலங்களில் எதேனும் ஒரு பிரிவில் அமெரிக்க விசா பெற்றவராக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் அமெரிக்க விசா அந்த நபருக்கு மறுக்கப்பட்டு இருக்கக் கூடாது. விசா கோரி விண்ணப்பிக்கும் நபர் இந்தியாவில் குடியுரிமை பெற்று இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவும்
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு மூலம் இந்தியாவில் இருந்து விசா விண்ணப்பதாரர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் வரை பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆசிய அமெரிக்கர்களுக்கான ஆலோசகர் அஜய் ஜெயின் பூட்டோரியா, தென் மத்திய ஆசியாவிற்கான உதவி வெளியுறவுச் செயலர் டொனால் லுவை சந்தித்த பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு மேம்படும் என்றும் அஜய் ஜெயின் பூடோரியா தெரிவித்தார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications