Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரேலை தாக்கும் அமெரிக்கா? டிரம்ப் போட்ட கையெழுத்து.. மத்திய கிழக்கில் மாறும் போர் சூழல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவும், இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகள். குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் இடையே நல்ல உறவு உள்ளது. இதற்கிடையே தான் தற்போது இருநாடுகள் இடையேயான உறவில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு வெள்ளை மாளிகையில் வைத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, கத்தார் பிரதமர் செய்க் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானியிடம் மன்னிப்பு கேட்க வைத்தது தான் முக்கிய காரணமாகும். இப்படியான சூழலில் தான் தற்போது இஸ்ரேலுக்கு எதிரான முக்கிய ஆர்டரில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனால் இஸ்ரேல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாராகிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றனர். இருநாடுகள் இடையே இருந்த நீண்டகால மோதல் போராக மாறியுள்ளது. இந்த போர் 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேல் படைகள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றன.

donald trump bejamin netanyahu qatar

இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போது போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்கா தயாரித்துள்ள ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொள்ளவில்லை. ஹமாஸ் அமைப்புக்கு 3 நாள் காலக்கெடுவை டிரம்ப் விதித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க கடந்த மாதம் 9 ம்தேதி நள்ளிரவில் திடீரென்று கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தனது போர் விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்தியது. தோஹாவில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த கலில் அல் ஹயா என்பவர் தோஹாவில் பதுங்கியுள்ளார். அவரை கொல்லும் முனைப்பில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியது. இதில் கலில் அல் ஹயா தப்பினார். மாறாக அவரது மகன் ஹமாம் அல் ஹயா, அவரது அலுவலக இயக்குநராக செயல்பட்டு வந்த ஜிகாத் லுபத், 3 பாதுகாவலர்கள், ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தது. அமெரிக்காவுக்கு, கத்தார் - இஸ்ரேல் ஆகியவை நல்ல நட்பு நாடுகள். கத்தாரை எடுத்து கொண்டால் தங்கள் நாடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதலை முறியடிக்க அமெரிக்கா உதவும் என்ற நம்பிக்கையை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி அமெரிக்காவின் விமானப்படை கத்தாரில் உள்ளது. இப்படியான சூழலில் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலை டிரம்ப் ஏற்கவில்லை.

இந்த தாக்குதல் தொடர்பாக கத்தார் அமெரிக்கா மீது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இஸ்ரேல் அட்டாக் குறித்து அமெரிக்கா தெரிந்திருந்தும் தங்களை அலர்ட் செய்யவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு போன் போட்டு கடிந்து கொண்டார். அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கத்தார் தலைநகர் தோஹா மீதான தாக்குதலை டிரம்ப் கண்டித்தார். மேலும் கத்தார் பிரதமரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெதன்யாகுவிற்கு பிரஷர் கொடுத்துள்ளார்.

இதையடுத்து வேறு வழியின்றி டிரம்ப் உடனான சந்திப்பிலேயே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெள்ளை மாளிகையில் இருந்து தொலைபேசியில் கத்தார் பிரதமர் செய்க் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார். அதுமட்டுமின்றி இனி வருங்காலத்திலும் கத்தார் மீது இதுபோன்ற தாக்குதலை நடத்தமாட்டேன் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சொல்ல வைத்தார் டிரம்ப்.

இது தற்போது நெதன்யாகுவிற்கு மானப்பிரச்சனையாக மாறி உள்ளது. இதனால் இஸ்ரேல், அமெரிக்கா மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் தற்போது டிரம்ப் போட்ட ஒரு கையெழுத்து மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது கடந்த 28 ம் தேதி டொனால்ட் டிரம்ப் முக்கிய உத்தரவில் கையெழுத்திட்டார். அது கத்தார் நலன் சார்ந்த உத்தரவாகும். கத்தாரில் அமெரிக்காவின் விமான்படை தளம் உள்ளது. இதனால் கத்தாரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த கையெழுத்தை டிரம்ப் போட்டார்.

அந்த உத்தரவில், கத்தாரின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. இதனால் கத்தாரை குறிவைத்து எந்த நாடு தாக்கினாம் அதன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும். கத்தாரின் பிரதேசம், இறையாண்மை மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு என ஏதாவது ஒரு இடத்தில் ஆயுத தாக்குதல் நடத்துவது என்பது அமெரிக்காவின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கத்தார் மீதான தாக்குதலை அமெரிக்கா தனது நாட்டின் மீதான தாக்குதலாக கருதி ராணுவ நடவடிக்கையை தொடங்கும் என்பது தான் இந்த உத்தரவின் முக்கிய சாராம்சம்.

இது தான் தற்போது இஸ்ரேலுக்கு பிரச்சனையாக மாறி உள்ளது. ஏனென்றால் கத்தாரை, இஸ்ரேல் எப்போதுமே ஆபத்தான நாடாக தான் பார்க்கிறது. பாலஸ்தீனத்தின் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஹமாஸ் அமைப்புகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அவ்வப்போது கத்தாரில் தான் பதுங்கி வருகின்றனர். இஸ்ரேலுக்கு எதிரான செயல்பாடுகளை அங்கு வைத்து திட்டமிட்டு அதன்பிறகு சதிவேலைகளை அரங்கேற்றுவதாக நெதன்யாகு கூறி வருகிறார். இப்படியான சூழலில் தான் கத்தார் மீண்டும் ஹமாஸ் அமைப்பினருக்கு அடைக்கலம் கொடுக்கலாம். இதனால் இஸ்ரேலும், கத்தாரை ‛அட்டாக்' செய்யலாம். இது நடக்கும் பட்சத்தில் கத்தாருக்கு ஆதரவாக இஸ்ரேலை, அமெரிக்கா தாக்கும் வகையில் இந்த உத்தரவு உள்ளது.

இருப்பினும் இஸ்ரேலை அவ்வளவு எளிதாக அமெரிக்கா சீண்டாது. தற்போதைய கையெழுத்து என்பது கத்தாரை சமாதானப்படுத்தும் வகையில் டிரம்ப் போட்டு இருக்கலாம். மற்றபடி எப்போதுமே இஸ்ரேலும், அமெரிக்காவும் நல்ல நட்பு நாடாகவே இருக்க அதிக சான்ஸ் உள்ளது என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள். ஆனாலும் கூட மத்திய கிழக்கில் இஸ்ரேலை அனைத்து இஸ்லாமிய நாடுகளும் எதிர்த்து வருகின்றனர். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பக்கப்பலமாக இருக்கிறது. ஆனால் கத்தாரை மையப்படுத்தி டிரம்ப் போட்டுள்ள இந்த உத்தரவு என்பது அமெரிக்காவால் இஸ்ரேலுக்கு ஆபத்தான ஒன்றாகவே பார்க்கப்படுவதையும் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் மறக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+