ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப்
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் கொடுக்கும் பதிலடியால் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு அதன் விலை கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுப்பதற்காக ஈரான் மீதான கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ஈரானுக்கு குட்நியூஸாக அமைந்துள்ள நிலையில் அமெரிக்கா பணிந்து செல்ல முடிவெடுத்துள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால் ஈரானுடன் பிற நாடுகள் வர்த்தகம் செய்வதை தவிர்த்து வருகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஒரு காலத்தில் நம் நாடு அதிகளவில் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்தது.

ஆனால் ஈரான் மீதான பொருளாதார தடைகளால் தான் நம் நாடு சவுதி அரேபியா, கத்தார், ஈராக் உள்பட பிற அரபு நாடுகள் பக்கம் சென்றது. இந்நிலையில் தான் தற்போது ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ள கத்தார், சவுதி அரேபியாக, பஹ்ரைன், ஓமன் உள்பட பல அரபு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் இந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், கேஸ் உள்ளிட்டவற்றை பிற நாடுகளுக்கு கொண்டு செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
இந்த கடல்வழிப்பாதை வழியாக தான் தினமும் உலகளவில் 20 சதவீத அளவிலான கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை நடக்கும் நிலையில் அது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய், கேஸ் வர்த்தகம் முடங்கி உள்ளது. இதனால் உலகம் முழுவதும் அதற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை கடந்துள்ளது.
கச்சா எண்ணெய் தேவை அதிகரிப்பு
இதனால் ஈரான் மீதான இந்த போரால் இந்தியா, சீனா உள்பட பிற ஆசிய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் அரபு நாடுகளின் எண்ணெய் வளங்கள், கேஸ் உற்பத்தி நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தான் அமெரிக்கா வேறு வழியின்றி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க விதித்த தடையை தளர்த்தியது. இருப்பினும் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளது.
ஈரான் மீதான தடையை நீக்க முடிவு
இதனால் ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அமெரிக்காவின் கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர், ''சுமார் 14 கோடி ஈரான் கச்சா எண்ணெய் பேரல்கள் தற்போது கடலில் முடங்கி உள்ளன. இந்த போருக்கு மத்தியிலும் கச்சா எண்ணெய் விநியோகத்தை சீராக்கி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கமாகும். இதனால் கப்பலில் ஏற்றப்பட்டுள்ள ஈரானின் கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்குவது பற்றி பரிசீலனை செய்து வருகிறோம்'' என்றார்.
ஈரான் அதிரடியால் மாறிய நிலவரம்
இது ஈரானுக்கு மிகப்பெரிய குட்நியூஸாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் கச்சா எண்ணெய் விஷயத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து ஈரான் வைத்த செக் அமெரிக்காவை நிலைக்குலைய செய்துள்ளது. மேலும் ஈரான் கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்என்ஜி கேஸ் உற்பத்தி ஆலையை ஏவுகணை கொண்டு தாக்கியது.
இதனால் அந்த நாட்டின் எல்என்ஜி கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சவுதி அரேபியா உள்பட பிற அமெரிக்காவின் நட்பு நாடுகளின் எரிசக்தி துறையின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஈரான் அடிக்கிறது. இது உலகளவில் கச்சா எண்ணெய் மட்டுமின்றி கேஸ் சப்ளையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் திரும்ப ஆக்ரோஷமாக தாக்காது என அமெரிக்கா நினைத்தது. ஆனால் ஈரான் அதிரடியாக பதிலடி கொடுத்து வருகிறது.
மண்டியிட்ட அமெரிக்கா
குறிப்பாக, ஈரான் போரால் பாதிக்கப்பட்டு்ள்ள கச்சா எண்ணெய் வர்த்தகத்தால் அமெரிக்கவிலும் பெட்ரோல் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. குறிப்பாக ஈரான் போரால் ப்ரென்ட் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்ந்தது. பிறகு குறைந்தது. தற்போது 3.1 சதவீத அளவுக்கு உர்ந்துள்ளது. இதனால் அமெரிக்காவிலும் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே தற்போதைய சூழலில் பணிந்து செல்வது தான் சரி என்று அமெரிக்கா, ஈரானின் கச்சா எண்ணெய் மீது போட்டுள்ள தடையை தளர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களினால் அமெரிக்கா, ஈரானிடம் பணிந்துள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்!












Click it and Unblock the Notifications