கைதான வெனிசுலா அதிபரை அமெரிக்கா சும்மா விடாது.. எச்சரித்த எக்ஸ்பர்ட்.. என்ன நடக்கும்? பரபரப்பு தகவல்
வாஷிங்டன்: வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா படைகள் கைது செய்துள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா விசாரணைக்கு உட்படுத்துவது உறுதி. இந்த நடவடிக்கை என்பது அமெரிக்காவை எதிரியாகப் பார்க்கும் அல்லது குற்றச் செயல்களில் தொடர்புள்ள அரசை அமெரிக்கா எப்படி கையாளும் என்பதற்காக சான்றாக கூறலாம். யாரும் குறை சொல்லக்கூடாது'' என்று புவிசார்ந்த அரசியல் நிபுணரும், ‛ஆரக்கள் அட்வைசரி' குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் வ்லாடா கலன் ‛ஒன் இந்தியா'வுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.
அமெரிக்கா - வெனிசுலா இடையே கடந்த சில வாரங்களாக மோதல் அதிகரித்தது. வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக வெனிசுலாவை சேர்ந்தவர்கள் நுழைவதாகவும் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்ய உதவினால் வழங்கப்படும் பரிசுத்தொகையை ரூ.438 கோடியாக டிரம்ப் உயர்த்தி அறிவித்தார். ஆனால் அவரது முயற்சி கைக்கூடவில்லை. இந்நிலையில் தான் இன்று அமெரிக்க படைகள் நேரடியாக களமிறங்கியது.
வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்து நாடு கடத்தியது. ஒரு நாட்டின் அதிபரை அவரது நாட்டுக்குள்ளேயே சென்று அமெரிக்க படைகள் கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது எளிதாக காரியம் கிடையாது. ஆனால் டொனால்ட் டிரம்ப் நிகழ்த்தி காட்டி உள்ளது.
டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு கியூபா உள்பட சில நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேவேளையில் சில நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தான் ‛ஒன் இந்தியா'வுக்கு புவிசார்ந்த அரசியல் நிபுணரும், ‛ஆரக்கள் அட்வைசரி' குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் வ்லாடா கலன் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
‛‛வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா விசாரணைக்கு உட்படுத்துவது உறுதி. அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கை வெறும் அரசியல் அழுத்தம், அரசியல் தடைகளை தாண்டி, வெனிசுலாவில் உள்ள தற்போதைய ஆட்சியை கவிழ்க்கும் சட்ட மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நோக்கிச் செல்கிறது.
நிகோலஸ் மதுரோவை எப்படி கைது செய்தார்கள் அல்லது சிறைப்பிடித்தார்கள் என்பது சட்டப்படி முக்கியம் இல்லை. கைது நடவடிக்கைகளை எப்படி செய்தார்கள் என்பதை விட அவர் மீதான குற்றச்சாட்டுகளில் தான் அமெரிக்கா கவனம் செலுத்தும். இந்த நடவடிக்கை என்பது அமெரிக்காவை எதிரியாகப் பார்க்கும் அல்லது குற்றச் செயல்களில் தொடர்புள்ள அரசை அமெரிக்கா எப்படி கையாளும் என்பதற்காக சான்றாக கூறலாம்.
நிகோலஸ் மதுரோவிலன் செயல்கள் அமெரிக்க நலன்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தினால் அதுவே அவர் மீது வழக்கு தொடர சரியான காரணமாக இருக்கும். போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் கும்பல்களுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாக நீண்டகாலமாக உள்ள குற்றச்சாட்டுகள் உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் வெறும் பெயரளவுக்கு இல்லை. அது ஒரு பெரிய சட்ட அமலாக்கக் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது.
வெனிசுலாவில் நிறைய எண்ணெய் வளம் உள்ளது. ஆனால் அதற்காக அமெரிக்கா இப்படி செய்யவில்லை. அந்த நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. போதைப்பொருள் கடத்தல், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவல் உள்ளிட்டவை தான் கைது நடவடிக்கைக்கு முக்கியமான காரணமாகும்.
நிகோலஸ் மதுரோ அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உடன் புதிய இடைக்கால அரசு அமைக்கப்படும். இது அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளுக்கு சாதகமான வகையில் இருக்கும். இருப்பினும் இந்த கைது நடவடிக்கை என்பது ஆட்சியை மாற்றும் முயற்சிக்காக மேற்கொள்ளப்படவில்லை. அதையும் தாண்டி அமெரிக்காவின் பாதுகாப்புக்காக செய்யப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் நடவடிக்கையை யாரும் கேள்வி கேட்கக்கூடாது'' என்று கூறியுள்ளார்.
-
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல்












Click it and Unblock the Notifications