இப்படியா பண்ணுறது.. யூடியூப் வியூஸ்க்காக.. விமானத்தை விழ வைத்து நொறுக்கி.. சிக்கலில் மாட்டிய இளைஞர்
வாஷிங்டன்: யூடியூப்பில் அதிக வியூஸ்களை பெற வேண்டும் என்பதற்காக சிறிய ரக விமானத்தை வேண்டும் என்றே கீழ விழுந்த இளைஞர் சிக்கலில் மாட்டியிருக்கிறார். அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாம்.
சமூக வலைத்தளங்களில் எந்நேரமும் மூழ்கி கிடக்கும் நபர்கள் பலரும் லைக்குகளுக்காகவும் அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் பல விசித்திரமான செயல்களிலும் ஈடுபட தொடங்குகின்றனர். சில நேரங்களில் இது முகம் சுளிக்க வகையிலும் இருக்கிறது.

அதுவும் யூடியூப்களில் வியூஸ்க்கு தகுந்த படி வருமானமும் கிடைப்பதால் பலரும் யூடியூப்களில் சேனல்கள் தொடங்கி வீடியோக்களை போடுகின்றனர். எத்தனையோ பேர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி யூடிப்பில் வீடியோ பதிவிட்டு வந்தாலும் சிலர் வியூஸ்க்காக பண்ணும் வேலைகள் எல்லாம் வேற ரகத்தில் உள்ளது.
அதுபோலத்தான் அமெரிக்காவில் ஒரு இளைஞர் யூடியூபில் வியூஸ்களை பறுவதற்காக விமானத்தையே விழுந்து நொறுங்க வைத்து இருக்கிறார். இது குறித்த விவரம் வருமாறு:- அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ல லாஸ் பட்ரேஸ் தேசிய வனப்பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு என்ஜின் மட்டும் கொண்ட சிறிய விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தை ஜேகப் என்ற இளைஞர் இயக்கி வந்தார். விமானம் விபத்துக்குள்ளான போது நடந்த நிகழ்வுகளை தனது கேமராவில் அப்படியே படம் பிடித்து இருந்தார். அதோடு திடீரென விமானத்தின் என்ஜின் செயல் இழந்து விட்டதாகவும் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை எனவும் கூறியபடியே பரபரப்பை ஏற்படுத்தினார்.
பிறகு விமானம் விழுந்த பிறகு அதில் இருந்து எழுந்து வந்த காட்சிகளையும் தனது கேமராவில் பதிவு செய்து வீடியோவாக தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து இருந்தார். இந்த வீடியோ சுமார் 30 லட்சத்திற்கு மேற்பட்ட வியூஸ்களை பெற்று இருந்தது. விமானம் விபத்துக்குள்ளானதாக ஜேகப் கூறிய வீடியோ அமெரிக்காவின் விமான ஒழுங்குமுறை போக்குவரத்து நிர்வாகத்தின் கவனத்திற்கும் சென்றது.
இது குறித்து விசாரணையை தொடங்கிய அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம், விமானம் விபத்துக்குள்ளாகியிருந்த சமயத்தில் விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முயற்சி செய்யாமல் இருந்ததையும் கண்டுபிடித்தது. அதேபோல், விமானத்தின் என்ஜினை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யவில்லை என்பதையும் பாதுகாப்பாக தரையிறங்க சில இடங்கள் இருந்த போதும் அதை வேண்டும் என்றே தவிர்த்ததையும் கண்டு பிடித்தது.
இதையடுத்து அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் மீதான குற்றத்தையும் ஜேகப் ஒப்புக்கொண்டார். ஜேகப் மீதான குற்றத்திற்காக அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாம். அதோடு ஜேகப்பிற்கு கொடுக்கப்பட்டு இருந்த பிரைவேட் பைலட் சான்றிதழையும் FAA ரத்து செய்தது. யூடியூப் வியூஸ்க்கு ஆசைப்பட்டு பல சிக்கலில் மாட்டி தவித்துக் கொண்டு இருக்கிறார் ஜேகப்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications