இந்தியாவை இனி தொடுங்க பார்க்கலாம்? டிரம்ப் வைத்த செக்! பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு விழுந்த அடி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஒரேயொரு உத்தரவு மூலம் இந்தியாவை சீண்டி பார்க்கும் பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளுக்கு செக் வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதோடு டொனால்ட் டிரம்ப் போட்ட உத்தரவின் பின்னணியில் உள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபரானது முதல் டொனால்ட் டிரம்ப் அடுத்தடுத்து அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். வரி விதிப்பு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக உள்ளவர்களை சொந்த நாட்டுக்கு கடத்துவது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

donald trump pakistan america

மேலும் அமெரிக்க அரசு சார்பில் யுஎஸ்ஏஐடி எனும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID or United States Agency for International Development) வழியாக பிற நாடுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை நிறுத்தி உள்ளார்.

இந்த USAID என்பது அரசு ஏஜென்சியாக இருந்தாலும் சுதந்திரமான (Independence Agency) அமைப்பாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்க மக்களின் வரிப்பணங்கள் பிற நாடுகளின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இந்த அமைப்பின் மூலமாக தான் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2023ல் மட்டுமே 4 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி உதவியை அமெரிக்கா வழங்கியது. இதனை டொனால்ட் டிரம்ப் விரும்பாத நிலையில் அந்த அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்படும் பணி மற்றும் நிதியை நிறுத்தி வைத்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.

இந்த உத்தரவால் பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியாவின் பல்வேறு அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதி என்பது பாதிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு கவலையான விஷயம் என்றாலும் கூட, டிரம்பின் நடவடிக்கையால் இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தியும் கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுக்கு நிதி என்பது நிறுத்தப்பட்டுள்ளது.

அதாவது, பாகிஸ்தானில் பஃலாஸ்-இ-இன்சானியத் என்னும் ஒரு அறக்கட்டளை உள்ளது. அறக்கட்டளை என்று பதிவு செய்திருந்தாலும், உண்மையில் இது அறக்கட்டளை இல்லை. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு உருவாக்கிய ஒரு நிறுவனம்.அறக்கட்டளை என்ற பெயரில் கள்ளத்தனமாக நிதியை பெற்று அதை லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தி வந்துள்ளது. இதுபற்றி அறியாத USAID இந்த அமைப்புக்கு ஆண்டுதோறும் கோடி கணக்கில் நிதி கொடுத்து வந்தது.

பாகிஸ்தானில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிராக தீவிரமாக செயல்படும் பயங்கரவாத அமைப்பில் முதலில் இருப்பது லஷ்கர் இ தொய்பா தான். காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களில் பெரும்பாலானவற்றை முன்னின்று நடத்துவதும் இந்த அமைப்பில் இருக்கும் பயங்கரவாதிகள் தான். 2008 நவம்பர் 26ம் தேதி உலகையே உலுக்கிய மும்பை அட்டாக்கை நடத்தி அப்பாவி மக்கள் 166 பேரை கொன்று குவித்ததும் இதே பயங்கரவாதிகள் தான். கொல்லப்பட்டவர்களில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர்.

இதனால் இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவும் லஷ்கர் இ தொய்பாவை சர்வதேச பயங்கரவாத அமைப்பு என்று ஏற்கனவே அறிவித்துள்ளது. இருப்பினும் கூட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் அறக்கட்டளை என்று தெரியாலம் பஃலாஸ் இ இன்சானியத் அறக்கட்டளைக்கு USAID ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிக்கொடுத்து தாராளம் காட்டி உள்ளது. இதற்கு 2 முக்கிய காரணம். ஒன்று, லஷ்கர் இ தொய்பா நேரடியாக நிதியை வாங்காமல், கள்ளத்தனமாக துவங்கிய அறக்கட்டளை மூலம் நிதியை வசூலித்தது. இன்னொன்று யுஎஸ் எய்ட் நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பகுதி என்றாலும் சுதந்திரமான அமைப்பு. இதனால் USAID செயல்பாட்டில் பிற துறை தலையீடு செய்ய முடியாது. இதனால் யாருக்கு நிதி வழங்குகிறார்கள் என்ற தகவல் அமெரிக்க அரசிடம் இல்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் அமெரிக்காவிடம் இருந்து நிதியை வாங்கி உள்ளனர்.

ஆனால் டொனால்ட் டிரம்ப் அரசின் DOGE (Department of Government Efficiency) என்ற அமெரிக்காவின் செயல்திறன் துறை தலைவர் எலான் மஸ்க் எல்லா முறைகேடுகளையும் கண்டுபிடித்து விட்டார். ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் அமெரிக்க பணம் யுஎஸ் எய்ட் மூலம் முறைகேடாக வழங்கப்படுகிறது என்றும், குற்றவாளிகள், பயங்கரவாதிகளுக்கும் கூட பெருமளவு நிதி போகிறது என்றும் டிரம்பிடமும் நேரடியாக கோர்த்துவிட்டார் எலான் மஸ்க். இதனால் கண்சிவந்த டொனால்ட் டிரம்ப் ஒரே கையெழுத்தில் USAID சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டம் மற்றும் வழங்கப்படும் நிதியை உடனடியாக நிறுத்தி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த USAID நிதி உதவி நிறுத்தப்பட்டதன் மூலம் தற்போது உண்மையிலேயே செயல்படும் அறக்கட்டளை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சில மாதங்கள் கழித்து USAID சார்பில் மேற்கொண்ட பணியை அமெரிக்க வெளியுறவுத்துறை தொடரும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நடக்கும் பட்சத்தில் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் இருந்து உலக நாடுகளுக்கு செய்யப்படும் உதவியில் சர்வதேச நிதி முறைப்படுத்தப்படும். பயங்கரவாதிகள், குற்ற பின்னணி உள்ள அமைப்புகள் இனி பலன் பெற முடியாது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+