ஆணுறைகள்.. ஆண், பெண் உள்ளாடைகள்.. "ஐயோ" விமானத்தில் கூட இப்படியா.. பணிப்பெண் பார்த்த ஷாக் மேட்டர்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: விமான பயணங்களின் போது நடந்த மிக மோசமான மற்றும் அருவருப்பான சம்பவங்கள் என்ன என்பது குறித்து விமானப் பணிப்பெண் ஒருவர் கூறியுள்ளார். அதில் இருக்கும் பல விஷயங்கள் அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.

விமான பயணங்கள் என்பது இப்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நூற்றாண்டில் கொரோனா ஆண்டுகளைத் தவிர்த்துப் பார்த்தால் பெரும்பாலான ஆண்டுகள் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

 Used Condoms, Underwear are the Disgusting Things Seen On plane says Flight attendant

இந்தக் காலத்தில் நேரம் என்பதே அனைத்தையும் விட முக்கியமாக இருக்கும் நிலையில், பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் விமான பயணங்களையே பலரும் தேர்வு செய்கிறார்கள்.

25 ஆண்டுகள்: இதற்கிடையே அமெரிக்காவில் உள்ளாவில் விமான நிறுவனத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றிய விமானப் பணிப்பெண் ஒருவர், பணியின் போது தான் கண்ட சில அருவருப்பான விஷயங்கள் குறித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். ரெட்டிட் தளத்தில் அவர் தனது பணிக்காலத்தில் நடந்த பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

விமானத்தில் தான் இதுவரை கண்ட மிகவும் மோசமான விஷயம் குறித்துப் பேசிய அவர், "விமானங்களில் சில பயணிகள் ரொம்பவே மோசமாக நடந்து கொள்வார்கள். நான் இதுவரை பார்த்ததில் மோசமான விஷயம் என்றால் அது பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், ஆண் பெண் உள்ளாடைகள் ஆகியவை தான்" என்று தெரிவித்துள்ளார். மேலும், பணிப் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாக சில பயணிகளே காரணம் என்றும் அவர் கூறினார்.

பயணிகள்: விமானங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், எப்படியும் வாரத்திற்கு ஒரு முறையாவது யாராவது டாய்லெட்டில் புகைபிடித்து மாட்டிக்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல ஆறு மாதத்திற்கு ஒருவராவது குடிபோதையில் பிரச்சினை செய்ய ஆரம்பித்துவிடுவார் என்றும் அவர் தெரிவித்தார். அதிலும் சில குறிப்பிட்ட ரூட்களில் பயணிக்கும் போது அடிக்கடி இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பணியில் இருக்கும் போதே ஓரிரு முறை தான் பயணிகளுடன் நெருக்கமாகவும் இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வேலையில் மோசமான விஷயம் என்ன என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு. "இந்த வேலையில் என்ஜாய் செய்யப் பல மேட்டர்கள் இருக்கு.. ஆனால், பயணிகளை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அது கொஞ்சம் கடுப்பாகவே இருக்கும்.

ரொம்ப மோசம்: அப்படித்தான் ஒரு முறை நான் பயணிக்கும் போது, என் மீது ஒருவர் எச்சைத் துப்ப முயன்றார். அதில் இருந்து மீண்டு வரவே எனக்கு சில மாதங்கள் வரை ஆனது. இப்படிப் பல மோசமான சம்பவங்கள் எங்களுக்கு நடக்கும். ஆனால், இதில் இருந்து மீண்டு வர எங்களுக்குப் பல மாதங்கள் வரை ஆகும்.. ஆனால், எங்களுக்குத் தரும் ஊதியம் என்பது அதற்கு ஏற்றதாக இல்லை. நல்ல சம்பளம் வாங்கக் குறைந்தது நீங்கள் இதே துறையில் 15 ஆண்டுகள் இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பயணிகள் என்ன செய்தால் விமானப் பணிப்பெண்களுக்கு அது உதவியாக இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "பெரிதாக எதுவும் இல்லை. அன்பாக இருங்கள்.. சொல்லும் விஷயங்களைக் காது கொடுத்துக் கேளுங்கள்.. நாங்களும் மனிதர்கள் தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.. அதுவே இரு தரப்பிற்கும் பெரியளவில் உதவியாக இருக்கும். ஸ்டிரேஸ் இல்லாமல் பயணிக்க உதவும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+