விவேக் ராமசாமி சொன்னதை ஜீரணிச்சுக்க முடியல! இந்தியா மீது.. அமெரிக்க தொழிலதிபர் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: "இந்தியாவின் எழுத்தறிவு பற்றியும், சீனாவின் கணித திறன் குறித்தும் யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை. நாங்கள் அமெரிக்கர்கள், நாங்கள்தான் கெத்து" என்று அமெரிக்க நிறுவனத்தின் சிஇஓ ஒருவர் பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த பேச்சு, இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியின் கருத்துக்கு பதிலடியாக பார்க்கப்படுகிறது. அப்படி என்னதான் பேசினார் நம்மாளு விவேக் ராமசாமி?

Vivek Ramaswamy US india

கடந்த ஆண்டு H-1B விசா பற்றிய சர்ச்சைகள் அதிகரித்திருந்தபோது, "அமெரிக்க கலாச்சாரம் கொஞ்சம் வித்தியாசமானது. அது சிற்பானதை வியந்து பார்ப்பதற்கு பதில், சராசரியான விஷயத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. கணித ஒலிம்பியாட்டு போட்டிகளுக்கு (செஸ் ஒலிம்பியாட் போல) முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதில், 'ப்ரோம் குயினை' கொண்டாடுகிறது. இதனால்தான் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறையில் அமெரிக்கர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் வெளிநாடுகளை சேர்ந்த ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது" என்று பேசியிருந்தார்.

ப்ரோம் குயின் என்றால் என்ன?

அமெரிக்க பள்ளிகளில் இறுதி ஆண்டில் நடைபெறும் ஆடம்பர விழாவில் 'ப்ரோம் குயின்' பட்டம் கொடுக்க மாணவி தேர்ந்தெடுக்கப்படுவார். பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் இந்த விழா மிகுந்த முக்கியத்துவம் கொண்ட நிறைவு விழாவாகும். பிரபலமான, அழகான, சமூகத்தில் முக்கியத்துவம் கொண்ட மாணவியை, அனைத்து மாணவர்களும் வாக்களித்து தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யப்படும் மாணவி ப்ரோம் குயின் என்று அழைக்கப்படுவார். மாணவர்கள் பிரிவில் விளையாட்டில் சிறந்த மாணவனை தேர்வு செய்வார்கள். அவர் 'ப்ரோம் கிங்' என்று அழைக்கப்படுவார்.

அறிவு vs அழகு

அறிவுக்கு முக்கியத்துவம் அளித்து, அதில் சிறந்தவர்களை தேர்வு செய்வதற்கு பதில் அழகு மற்றும் இதர விஷயங்களில் முன்னணியில் உள்ள மாணவர்களை தேர்வு செய்வது, நாட்டின் வளர்ச்சிக்கு பயன் தராது என்பதுதான் விவேக் ராமசாமியின் வாதம். ஓராண்டுக்கு முன்னர் சொன்ன கருத்துக்கு, தற்போது பதில் கருத்தை தூக்கி வந்திருக்கிறார் அசோரியா நிறுவனத்தின் சிஇஓ ஜேம்ஸ். இவர் தொடர்ந்து H-1B விசா நடைமுறையை எதிர்த்து வருகிறார். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலாவுக்காக மட்டுமே அமெரிக்காவுக்குள் நுழைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா குறித்து பாடம்

இப்படி இருக்கையில் இன்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் குடியரசுக் கட்சியின் மாணவர் குழு விழாவில் அவர் பேசுகையில், "அமெரிக்கர்கள் தாங்கள் யார் என்பதற்காக மன்னிப்பு கேட்க தேவையில்லை. இந்தியாவின் எழுத்தறிவு பற்றியும், சீனாவின் கணித திறன் குறித்தும் யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை. நாங்கள் அமெரிக்கர்கள், நாங்கள்தான் கெத்து. கணித ஒலிம்பியாட் போட்டிக்காக அமெரிக்கர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயம் போகாமல் இருக்க மாட்டார்கள்.

வேதியியல் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு விளையாட்டு நிகழ்ச்சிகளை தவறவிட மாட்டார்கள். இதற்காக எல்லாம் அமெரிக்கர்கள் தங்கள் கலாச்சாரத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறியிருக்கிறார்.

கல்வியால் உயர்ந்த இந்தியர்கள்

கல்விதான் பொருளாதார ரீதியாக ஒருவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்பதை இந்தியர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மக்கள் கல்வியை ஆயுதமாக கொண்டு தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். நாட்டையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கிறார்கள். ஆனால் அதெல்லாம் கிடையாது என்று சொல்வதை போல இருக்கிறது ஜேம்ஸின் கருத்து என்று பலரும் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+