அமெரிக்காவே ஆடிப்போச்சு.. இப்படிப்பட்ட புயல், மழை நம்ம ஊருக்கு வராத வரைக்கும் நல்லது.. பாருங்க
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மில்டன் புயல் கடுமையாக பாதித்துள்ளது. அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 30 லட்சம் பேர் இருளில் மூழ்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை வெள்ளை மாளிகை விரைவுப்படுத்தி உள்ளது. இந்நிலையில் புயல் எப்படி தாக்கியது என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த காட்சி காண்போரை கலங்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் ஹெலென் என்ற பெரும் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழைக்கு அங்கு சுமார் 230 பேர் பலியாகினார்கள். சுமார் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. அந்த புயல் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தற்போது தான் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு மக்கள் திரும்பி வந்தார்கள். புயல் பாதிப்பில் இருந்து மக்கள் முழுமையாக மீள்வதற்குள் அடுத்த புயல் தாக்கி உள்ளது. மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் புளோரிடா மாகாணம் தம்பா பகுதியில் நேற்று கரையை கடந்தது.

மில்டன் புயல் கரையை கடந்த போது, தரைப்பகுதியில் மணிக்கு சுமார் 260 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனை தொடர்ந்து பெய்த கனமழையால் புளோரிடாவில் உள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதந்து தத்தளிக்கின்றன. இந்த புயலால் கட்டுமான பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த ஒரு ராட்சத கிரேன் கவிழ்ந்தது. அந்த கிரேன் விழுந்ததில் அடுக்குமாடி குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்தது.
அதேபோல் புயல் காற்று பலமாக வீசிய காரணத்தால் புளோரிடா மாகாணத்தில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சரிந்து விழுந்துள்ளன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் பேர் இருளில் சிக்கி தவிக்கிறார்கள். அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அமெரிக்காவின் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளனர்.
This is what a 15 foot hurricane storm surge looks like. It's terrifying. 🤯 pic.twitter.com/PKAtoN6Hv8
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) October 10, 2024
புளோரிடாவின் வெள்ளம் பாதித்த பல பகுதிகளில் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் நிதியுதவி உள்ளிட்ட வெள்ள நிவாரண வசதிகளை அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை செய்து வருகிறது. புளோரிடாவில் ஏராளமான தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பல லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மில்டன் புயலால் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புளோரிடாவின் ஃபோர்ட் பியர்ஸ் அருகே உள்ள ஸ்பானிஷ் லேக்ஸ் கன்ட்ரி பகுதியில் மட்டும் ஐந்து பேர் பலியானதாக கூறப்படுகிறது. புயலை தொடர்ந்து கனமழையும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பும் மிக மோசமானதாக இருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பார்த்த பலர். இப்படிப்பட்ட புயல், மழை நம்ம ஊருக்கு வராத வரைக்கும் நல்லது என்று கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications