இந்தியாவுக்கு டிரம்ப் தரும் பெரிய ஆஃபர்.. 500 % வரி மிரட்டலுக்கு நடுவே பிரதமர் மோடி ஏற்பாரா?
வாஷிங்டன்: வெனிசுலாவின் கச்சா எண்ணெயை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. இந்நிலையில் தான் வெனிசுலாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 500 சதவீத வரி விதிக்கும் மசோதாவுக்கு டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில் இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தலா 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் நமக்கு விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது போதாது என்று ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை மேற்கொள்ளும் நாட்டுக்கு 500 சதவீத வரி விதிக்கும் மசோதாவுக்கு டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கி உள்ளார். இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இந்தியாவும், சீனாவும் அதிகளவில் பாதிக்கப்படும்.
இந்நிலையில் தான் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வெள்ளை மாளிகை முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. இதுபற்றி வெள்ளை மாளிகை அதிகாரி கூறுகையில், ‛‛அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள வெனிசுலாவின் கச்சா எண்ணெயை இந்தியா வாங்க தயாராக உள்ளது. நாங்களும் வெனிசுலா கச்சா எண்ணெயை அனுப்ப தயாராக உள்ளோம். இதற்கான அனுமதியை வழங்கவும் ரெடியாக இருக்கிறோம்.
அமெரிக்காவின் தடைகளால் முடக்கப்பட்ட வர்த்கத்தை இருநாடுகள் இடையே புதுப்பிக்கும் வகையில் இருக்கும். முன்னதாக அமெரிக்காவின் எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ்டோஃபர் ரைட் இதனை உறுதி செய்திருந்தார். வெனிசுலாவின் கச்சா எண்ணெயை ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும் விற்பனை செய்ய தயாராக உள்ளோம் என்று அவர் கூறியிருந்தார்'' என்று தெரிவித்தார்.
உலகிலேயே எண்ணெய் வளம் அதிகம் கொண்ட நாடு வெனிசுலா தான். இந்த நாட்டில் இருந்து நம் நாடு அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. இதற்கிடையே தான் அமெரிக்கா பல்வேறு தடைகளை வெனிசுலா மீது விதித்தது. இதையடுத்து நம் நாடு வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்தது. சமீபத்தில் வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
ஆனால் அதற்குள் டொனால்ட் டிரம்ப் தனது படைகளை அனுப்பி வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை நாடு புகுந்து கைது செய்தார். நிகோலஸ் மதுரோ தற்போது நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ள நிலையில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்கா மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் தான் வெனிசுலாவின் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு அனுப்ப தயாராக இருக்கிறோம் என்று வெள்ளை மாளிகையின் அதிகாரி கூறியுள்ளார்.
ஆனால் இந்த ஆஃபரை பிரதமர் மோடி ஏற்பாரா? என்பது தெரியவில்லை. ஏனென்றால் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து நம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எப்படியாவது ரஷ்யா - இந்தியா உறவை முறிக்க வேண்டும் என்று நினைக்கிறார். மேலும் 50 சதவீத வரி விதிப்புக்கு பிறகு இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இன்னும் உடன்படவில்லை. பிரதமர் மோடி, டிரம்பிடம் இறங்கி செல்ல வேண்டும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் மோடி , டிரம்பின் அடாவடிக்கு பணியவில்லை.
இதனால் டிரம்ப்புக்கு, மோடி மீது கடும் கோபம் உள்ளது. இப்படியான சூழலில் அமெரிக்காவின் வழியாக வெனிசுலா வின் கச்சா எண்ணயை இந்தியாவுக்கு வழங்க தயார் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளதை மோடி ஏற்பாரா? என்பதை அறிய நாம் இனு்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
-
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications