"ராகுல் காந்தி வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்".. அமெரிக்கா சொன்ன முக்கியமான விஷயம்
வாஷிங்டன்: இந்திய நீதிமன்றங்களில் நடைபெறும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டார். 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ந் தேதியன்று கர்நாடக மாநிலம், கோலாரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி எல்லா திருடர்களும் தங்கள் பெயருக்குப்பின்னே மோடியை பொதுவான பெயரையே வச்சிருக்காங்க" என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் நரேந்திர மோடியைக் குறிவைத்து ராகுல் காந்தி பேசிய இந்தப் பேச்சு, பெருத்த சர்ச்சையானது.

குஜராத் அமைச்சர்
இது தொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, குஜராத்தின் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார். அவர் தனது மனுவில் ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

ராகுல் காந்தி குற்றவாளி
இந்த வழக்கைப் பரிசீலித்த நீதிமன்றம், இதில் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாகக் கூறி, விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.வர்மா விசாரித்தார். விசாரணைக்கு பின்னர் நேற்று தீர்ப்பை அவர் அறிவித்தார். நீதிபதி கூறுகையில், ராகுல் காந்தி மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது . ராகுல் காந்தி குற்றவாளி , அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.

மோசமான முன்னுதாரணம்
சூரத் நீதிமன்றம் தனது தீர்ப்பில், ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டாலும் அவரது நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் எம்.பி. என்ற தகுதியில் மக்களிடம் பேசும் ஒரு எம்.பி. மற்றும் சமூகத்தின் பெரும்பகுதியை பாதிக்கிறார், எனவே இந்த குற்றத்தின் விளைவுகள் இந்த வழக்கில் மிகவும் விரிவானது. அவருக்கு தண்டனையை குறைப்பது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும். சமூகத்தில் ஒரு எதிர்மறை செய்தி.அதை மனதில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது" என்று சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2ஆண்டு சிறை தண்டனை ஏன் என்பது குறித்து தீர்ப்பில் விளக்கம் அளித்திருந்தது.

மக்களவை செயலகம்
இந்நிலையில் சூரத் நீதிமன்றம் மோடி குறித்து அவதூறாக பேசியதாக 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த மறுநாளே மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும், குடியரசுத் தலைவருக்கும் நகல்களை மக்களவை செயலகம் அனுப்பி வைத்து இருந்தது. மக்களவை செயலகம் இப்படி அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே அதாவது இன்று வயநாடு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ராகுல் காந்தி குடியிருந்து வரும் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

போராட்டம்
இந்நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுமே ஒன்று திரண்டு இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ராகுல் காந்திக்கு ஆதரவாக கெஜ்ரிவால் தொடங்கி மம்தா பனார்ஜி வரை அனைவருமே கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு நடந்தது பெரும் அநீதி என பாஜகவை கடுமையாக கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தன. இதுஒருபுறம் எனில் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கி உள்ளது.

உலக நாடுகள்
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் இந்தியாவை தாண்டி உலக நாடுகளிலும் பேசுபொருளாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து அமெரிக்கா தனது கருத்தை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தகவல்
அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும் போது, "சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது எந்தவொரு ஜனநாயக நாட்டின் அடிப்படையாகும். இந்திய நீதிமன்றங்களில் நடைபெறும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாங்கள் ஜனநாயகக் கொள்கைகளின் முக்கியத்துவத்தையும், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் எங்கள் இரு நாடுகுளின் ஜனநாயகங்களையும் வலுப்படுத்துவதற்கான திறவுகோலாகத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறோம்" என்றார்.

இயல்பான அளவு
அப்போது செய்தியாளர்கள் இந்தியாவுடன் அமெரிக்கா இந்த விவகாரத்தில் தொடர்பில் உள்ளதா? அல்லது ராகுல் காந்தியுடன் தொடர்பு கொள்கிறதா என்று கேட்டார்கள். அதற்கு அவர், " குறிப்பிட்டு சொல்லுப்படியான எந்த தொடர்பும் இல்லை... ஆனால் எங்களுடன் நட்பில் உள்ள நாடுகளுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் எப்படி செயல்படுவோ அந்த அளவிற்கே பரஸ்பரம் இயல்பான அளவிலேயே இருக்கிறது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். மற்றபடி குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த சிறப்பு ஈடுபாடும் இல்லை" என்றார்.
-
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்காமல் நைசாக நழுவிய இந்திய கப்பல்.. புதிய ரூட்டை பிடித்து பயணம்! ஆஹா -
ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் 3200 எண்ணெய் கப்பல்கள்.. 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீர் இல்லாமல் அவதி -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம்












Click it and Unblock the Notifications