வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் நடப்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.. போராட்டங்கள் குறித்து அமெரிக்கா பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    அமித் ஷாவிற்கு தடை விதிக்க அமெரிக்கா ஆணையம் பரிந்துரை | USCIRF seeks sanctions against Amit Shah

    வாஷிங்டன்: இந்தியாவில் நடந்து வரும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த போராட்டங்களை உலக நாடுகள் பல உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

    we seeing actives in india, protests over Citizenship Ammendment Act : US

    இந்நிலையில் அமெரிக்காவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து இந்தியாவில் வெளிப்படையாகவே நடந்துவரும் அரசியல் விவாதங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்கள் மற்றும் நீதித்துறை செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் முழுமையாக அறிவோம். குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

    இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை நாங்கள் மதிக்கிறோம், சிறுபான்மை உரிமைகள், மத சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவை ஜனநாயக நாட்டின் முக்கியமான தூண்கள் என்ற உண்மையைப் பற்றியும் இந்தியாவுடன் பேச வேண்டும் என்றார்.

    we seeing actives in india, protests over Citizenship Ammendment Act : US

    முன்னதாக நேற்று அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க அரசின் பிரதிநிதிகளை சந்தித்து குடியுரிமை சட்டம் குறித்து விளக்கினார். இதுவரை அமெரிக்கா இந்தியாவில் நடந்து வரும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை கண்டித்து வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாறாக இந்திய அரசு சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    English summary
    US Senior State department official on Citizenship Ammendment Act & NRC: Obviously,we are seeing active political debate,discussions in parliament, protests by ppl who are espousing their views on that law, &we’re also fully aware that there is judicial process that’s underway
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X