மரணங்களை மாற்றும் AI.. "இதெல்லாம் எப்படி சாத்தியம்.." வியப்பின் உச்சத்தில் நெட்டிசன்கள்! வாவ் செம
வாஷிங்டன்: பொதுவாக அனைவரது வாழ்விலும் அன்பிற்குரியவர்களின் மரணங்கள் தான் அதிக வலியைத் தரும்.. இதைத்தான் ஏஐ வல்லுநர்கள் மாற்ற முயல்கிறார்கள். அதில் ஓரளவுக்கு வெற்றியையும் பெற்றுள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளும் துறை ஏஐ என்று நாம் யோசிக்காமல் சொல்லலாம். ஏஐ துறையில் இப்போது நடக்கும் மாற்றங்கள் உலகை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்று வருகிறது.

இது அத்தனையையும் தொடங்கி வைத்தது என்னவோ சாட் ஜிபிடி தான். மைக்ரோசாப்ட் நிதியளித்த ஓபன் ஏஐ நிறுவனம் உருவாக்கிய இந்த சாட் ஜிபிடி, ஏஐ துறையில் நமது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டியுள்ளது என்ன சொல்லலாம்.
ஏஐ கருவிகள்: சாட் ஜிபிடி ஏதோ வெறும் சாட் பாக்ஸ் என நினைத்து விடாதீர்கள்.. அதையும் தாண்டிய ஒன்று.. சாட் ஜிபிடி வருகை தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய புரட்சியைக் கொண்டு வந்துள்ளது. கட்டுரைகள், கவிதைகள், பவர்பாயிண்ட்கள், அவ்வளவு ஏன் படத்திற்கான ஸ்கிரிப்ட்களையும் கூட சாட் ஜிபிடியால் எழுத முடியும்.. இப்படி மிகவும் பவர்புல்லான ஒரு ஏஐ கருவியாக இருப்பதால், இதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனிடையே சிலர் இதை உண்மையில் அடுத்த லெவலுக்கே எடுத்துச் சென்றுவிட்டனர். அதாவது இறந்தவர்களை உயிர்ப்பிக்கவும், அவர்களுடன் பேசவும் இந்த ஏஐ கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். இது நெட்டிசன்களை அப்படியே உறைய வைத்துள்ளது. இதை அவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்பது குறித்துப் பார்க்கலாம்.
மரணம்: பொதுவாக அனைவரது வாழ்விலும் அன்பிற்குரியவர்களின் மரணங்கள் தான் அதிக வலியைத் தரும் ஒன்று. கஷ்டம், சோகம், மகிழ்ச்சி என எந்த நேரத்திலும் நமது அன்பிற்குரியவர்களைத் தான் நாம் தேடுவோம். அப்போது அவர்கள் இல்லை என்பது நமக்கு அதீத வலியையே தரும். இதைத்தான் ஏஐ வல்லுநர்கள் மாற்ற முயல்கிறார்கள்.
ஏஐ மூலம் மரணத்தை மாற்ற வேண்டும் என்பதே அவர்கள் இலக்கு. இதற்காக சினிமாவில் வருவது போலச் சாகா வரம் என்பதெல்லாம் இல்லை அவர்களின் இலக்கு. அதற்குப் பதிலாக உயிரிழந்தோர் எப்படிப் பேசுவார்களோ அதை அப்படியே ஏஐ மூலம் மறு உருவாக்கம் செய்வதே அவர்கள் இலக்காகும்.
எப்படி: உதாரணத்திற்கு, யூ ஜியாலின் என்ற சீன பொறியாளரின் தாத்தா உயிரிழந்த போது, அவருக்கு வயது வெறும் 17. வீடியோ கேம்கள் தொடங்கிப் பல விஷயங்களுக்கு தனது தாத்தா எப்படித் திட்டுவார் என்பது யூ ஜியாலினுக்கு நன்கு தெரியும். திட்டினாலும் கத்தினாலும் தனது தாத்தா எப்போதும் தனக்கு பேவரைட் என்கிறார் யூ ஜியாலின்.
17 வயதில் தனது தாத்தாவை இழந்த அவருக்கு, ஏஐ தொழில்நுட்பம் ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. இதன் மூலம் அவர் உயிரிழந்த தாத்தாவுடன் (அல்லது அதேபோல பேசும் ஏஐ) பேச முடியும் என நம்பினார். பல காலம் தேடிய அவர், இதற்கான ஏஐ நுட்பம் ஏற்கனவே இருப்பதைக் கண்டுபிடித்தார். இது கடைசியில் அவருக்குப் பலனைத் தந்தது. தனது தாத்தாவின் டிஜிட்டல் வெர்ஷனை உருவாக்கினார்.
தனது லேப்டாப்பை எடுத்து அவர், "தாத்தா. நான் யார் என்று சொல்ல முடியுமா?" என டைப் செய்தார். அப்போது அவரது தாத்தாவைப் போலவே தோற்றம் தரும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஒரு நபரின் படம் தோன்றி, யூ ஜியாலின் கேள்விகளுக்குப் பதில் சொன்னது. ஜியாலின் தனது தாத்தாவின் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கடிதங்களைப் பயன்படுத்தி இந்த ஏஐ கருவியை உருவாக்கி இருக்கிறார்.
எப்படி சாத்தியம்: இந்த தொழில்நுட்பத்தை ஆங்கிலத்தில் griefbots என்று குறிப்பிடுகிறார்கள். ஏஐ மூலம் இயங்கும் இது உயிரிழந்த ஒருவருடன் பேசுவது போன்ற ஒன்றை உருவாக்கும் சாட்போட்கள் ஆகும்.. அனைத்து மெசேஞ்கள், சமூக வலைத்தள பதிவுகள் என அனைத்து தகவல்களையும் எடுப்பதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. உயிரிழந்தோருடன் பேசுவது என்பது சீனாவில் மட்டுமல்ல,அமெரிக்கா உட்பட உலகின் பிற நாடுகளில் மெல்ல அதிகரித்து வருகிறது.
அதேநேரம் இதிலும் ஆபத்துகள் கொட்டிக் கிடப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். உயிரிழந்தோர் பற்றிய A டூ Z வரை நாம் அனைத்து தரவுகளையும் வழங்குகிறோம். அப்படியிருக்கும் போது, இதை ஹேக்கர்கள் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications