பாத்ரூமில் "அணு ஆயுத" ஆவணங்கள்.. இந்த நேரத்தில் இப்படியொரு சிக்கலா! கையை பிசையும் டிரம்ப்! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போது முக்கிய வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இதற்கிடையே சீக்ரெட் ஆவணங்களைப் பதுக்கிய விவகாரத்தில் வேறு சில முக்கிய தகவல்களும் இப்போது வெளியாகியுள்ளது.

எப்போதும் சர்ச்சைக்குப் பெயர் போனவர் டிரம்ப். அவர் அதிபராக இருந்த போதே தொடர்ந்து சர்ச்சை கருத்துகளைக் கூறி வந்தவர். கொரோனா பரவல் சமயத்தில் மாஸ்க் கூட போடாமல் தொடர்ச்சியாகப் பிரசார கூட்டங்களில் பேசியவர்.

 What are the charges including Keeping US nuclear files in shower are against Donald Trump indictment

இது மட்டுமின்றி தேர்தலில் தோற்ற போது தனது தோல்வியை டிரம்ப் ஒப்புக்கொள்ளவே இல்லை. தேர்தலில் மிகப் பெரிய மோசடி நடந்ததாகத் தொடர்ந்து பொய்யான கருத்துகளைப் பரப்பி வந்தார். மேலும், தனது தொண்டர்களை நாடாளுமன்றத்தை முற்றுகையிட வைத்தார்.

டிரம்ப்: இதனால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டது. சில உயிரிழப்புகள் கூட ஏற்பட்டது. அமெரிக்க ஜனநாயகத்தின் கறுப்பு நாளாக இது கருதப்பட்டது. அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகும் கூட அவர் சர்ச்சையில் இருந்து தள்ளி நிற்கவில்லை. அவர் மீது பெண் பிரபலங்கள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதில் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் மீதான புகாரில் டிரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை எல்லாம் கூட தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே டிரம்ப் 2021 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பிறகும் கூட தனது புளோரிடா வீட்டில் அரசின் சீக்ரெட் ஆவணங்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். அமெரிக்காவின் அணுசக்தி ரகசியங்கள் மற்றும் ராணுவத் திட்டங்கள் உள்ளிட்ட பல நூறு ரகசிய ஆவணங்களைத் தவறாகக் கையாண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

31 குற்றச்சாட்டுகள்: இந்த வழக்கை அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.. டிரம்ப் மொத்தம் 37 கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இதில் சீக்ரெட் தகவல்களை வைத்திருந்ததாக மட்டும் அவர் மீது 31 குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அவரது புளோரிடா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. டிரம்ப் அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள நிலையில், இது அவருக்குச் சிக்கலை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

இந்த விவகாரத்தில் அவர் விசாரணையைத் தடுக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருப்பினும் தான் எந்தவொரு தவறையும் செய்யவில்லை என்றே டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். அவர் வரும் செவ்வாய்க்கிழமை இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாத்ரூம்: டிரம்ப் தனது புளோரிடா கிளப்பில் உள்ள வீட்டில் பாத்ரூம் மற்றும் ஷவரில் ரகசிய ஆவணங்களைச் சேமித்து வைத்துள்ளார். அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் குறித்த தகவல்களை பாத்ரூம் மற்றும் ஷவரில் அவர் வைத்துள்ளார்.பாதுகாப்பு, அமெரிக்க அணுசக்தி திட்டங்கள் மற்றும் அமெரிக்கா & அதன் நட்பு நாடுகளின் ராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகும் சாத்தியக்கூறுகள் குறித்த தகவல்கள் அங்கே இருந்துள்ளது.

அங்கே இருந்த சில ஆவணங்களை உட்சபட்ச ரகசியத் தகவல்களையும் கொண்டிருந்ததாம். மேலும் ரகசிய ஆவணங்களை உரிய அனுமதியில்லாத இருவருக்குக் காட்டியதாகவும் டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஒரு முறை தாக்குதல் திட்டத்தையும், மற்றொரு முறை உளவு துறையின் ரகசிய மேப்பையும் அவர் மற்றவர்களிடம் காட்டியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

எங்கெல்லாம் இருந்தன: அங்கே முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் ரூமில் ஒரு செட் ஆவணங்கள் இருந்துள்ளது. அதேபோல பாத்ரூமிலும் கூட சீக்ரெட் ஆவணங்களைக் கொண்ட பெட்டிகளை எப்.பி.ஐ அதிகாரிகள் கைப்பற்றினர். டிரம்ப் தனது வழக்கறிஞர்களிடமே இது குறித்து முழு உண்மையைத் தெரிவிக்கவில்லையாம். ஒரு கட்டத்தில் இது குறித்து தகவல்கள் வெளியான போது ரகசிய ஆவணங்களை அழிக்கவும் கூட டிரம்ப் அறிவுறுத்தவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த வழக்கில் தான் டிரம்ப் வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இதற்கிடையே அவரது வழக்கறிஞர் குழுவில் இருந்தும் இருவர் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+