"காதலியின்" ரகசிய Chat பத்திரமா இருக்கும்.. யாராலும் படிக்க முடியாது.. வாட்ஸ்அப்பில் சூப்பர் வசதி!
வாஷிங்டன்: வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது புதிதாக சாட் லாக் என்ற ஒரு அட்டகாசமான வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது நமக்குப் பெரியளவில் பயன் தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் திங்களன்று பயனர்களின் மிக நெருக்கமான உரையாடல்களை இன்னும் தனிப்பட்டதாக மாற்றுவதற்காக 'சாட் லாக்' என்ற புதிய வாட்ஸ்அப் அம்சத்தை அறிவித்தார்.
இப்போது உலகில் அனைவரும் பயன்படுத்தும் மெசேஜிங் செயலியாக வாட்ஸ்அப் இருக்கவே செய்கிறது. இப்போது பல கோடி பேர் உலகெங்கும் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப்: கடந்த 2009இல் அறிமுகமான வாட்ஸ்அப் சில காலத்திலேயே ஹிட் அடித்தது. வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், 2014ஆம் ஆண்டு வாட்ஸ்அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.
இப்போது அதிக பேர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. நண்பர்கள் உடனும், அலுவலகத்திற்கும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. முதலில் வாட்ஸ்அப் செயலி இலவசமாகவே இருந்தது. அதில் எந்தவொரு விளம்பரங்களும் வராமலேயே இருந்தது. முதலில் வாட்ஸ்அப் செயலி மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்துப் பிற செயலிகள் மூலம் விளம்பரங்களை அளித்தனர்.

சாட் லாக்: இப்போது நேரடியாக வாட்ஸ்அப் செயலியிலேயே சாட்களை போல விளம்பரங்கள் வருகிறது. இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அதேநேரம் வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது தனது செயலியில் பல புதிய வசதிகளைக் கொண்டு வருகிறார்கள். பலரும் எதிர்பார்க்கும் வசதிகளை வாட்ஸ்அப் தருவதால் இப்போது பெரும் எதிர்பார்ப்பே நிலவி வருகிறது. இதற்கிடையே வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது சாட் லாக் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை மெட்டா (பேஸ்புக்) நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் நேற்று திங்கள்கிழமை வெளியிட்டார். இந்த சாட் லாக் வசதி பயனர்களின் நெருக்கமான உரையாடல்களை இன்னும் தனிப்பட்டதாக முறையில் வைத்திருக்க உதவும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த சாட் மிக பெரியளவில் உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி செயல்படும்: இந்த வசதி மூலம் நெருக்கமான உரையாடல்களை பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்யலாம். இந்த உரையாடல்கள் தனியாக ஒரு போல்டரில் பாதுகாக்கப்படும். சாட் லாக் செய்த நபர் உங்களுக்கு மெசேஜ் செய்தால், அவரது பெயர் மற்றும் செய்தியின் உள்ளடக்கம் ஆகியவையும் மறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் ஒருவரது சாட் 'லாக்' செய்யப்பட்டால், அந்த முழு உரையாடலும் இன்பாக்ஸிலிருந்து எடுக்கப்பட்டு, தனியாகச் சேமிக்கப்படும். சாட் நோட்டிபிக்கேஷன் கூட மறைத்துவிடும். இதன் மூலம் ஒருவரது தனிப்பட்ட சாட்டையும் லாக் செய்யலாம். க்ரூப் மெசேஞ்சையும் லாக் செய்ய முடியும். செயலியை அப்டேட் செய்வதன் மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் இந்த வசதியை நாம் பெறலாம்.

பாஸ்வோர்ட் மூலம் அணுகலாம்: இப்படி லாக் செய்த ஒரு சாட்டை பாஸ்வோர்ட் மூலம் மட்டுமே அணுக முடியும். அல்லது மாறாகக் கைரேகை போன்ற பயோமெட்ரிக் மூலம் பயன்படுத்த முடியும். அவ்வப்போது குடும்ப உறுப்பினர்களுடன் அலைப்பேசியைப் பகிர்வோருக்கு இந்த சாட் லாக் வசதி பெரியளவில் பயன்படும் என்றே வாட்ஸ்அப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி வரும் காலத்தில் சாட் லாக்கில் பல புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது நாம் பல சாட்களை லாக் செய்திருந்தால்.. ஒவ்வொரு சாட்டிற்கும் ஒவ்வொரு பாஸ்வோர்ட்டை பயன்படுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications