உலகையே அழித்துவிடும்.. "Disease X.." மிரள வைக்க போகும் அடுத்த பெருந்தொற்று .. அலறும் ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: கொரோனாவின் கோரத் தாண்டவமே இப்போது தான் முடிந்துள்ள நிலையில், அடுத்து ஆய்வாளர்கள் டிசீஸ் எக்ஸ் குறித்த ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டிசீஸ் எக்ஸ் (Disease X)- இப்போது உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இதைச் சுற்றியே தங்கள் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். ஆனால், இது எதோ பழமையான நோய் எல்லாம் இல்லை. சொல்லப்போனால் கடந்தாண்டு தான் இந்த வார்த்தையே உருவாக்கப்பட்டது.

அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு எப்படி கொரோனா வந்து கோரத் தாண்டவம் ஆடிவிட்டுச் சென்றதோ.. அதேபோல அடுத்த முறை எதாவது பெருந்தொற்று ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி நடப்பதே இந்த டிசீஸ் எக்ஸ் ஆய்வாகும்.
அதாவது எபோலா வைரஸ் போன்ற ஏற்கனவே தெரிந்த ஒரு பெருந்தொற்றுக்கு வேக்சின் கண்டுபிடிப்பதை விட.. எதிர்காலத்தில் தோன்றும் பெருந்தொற்றை சமாளிக்க என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்வதே இந்த நோக்கமாகும்.
இந்த டிசீஸ் எக்ஸ் என்றால் என்ன: இதுவரை நமக்குத் தெரியாத ஒரு வகையான நுண்ணுயிர் பாதிப்பால் ஏற்படும் பெருந்தொற்றை தான் டிசீஸ் எக்ஸ் என்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டில் இந்த டீசிஸ் எக்ஸ் குறித்த ஆய்வுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவித்து. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் கொரோனா வைரஸும் ஒரு வகையான டீசீஸ் எக்ஸ் தான். அதாவது கொரோனா பரவும் முன்பு வரை அது குறித்து யாருக்கும் தெரியாது. ஆனால், அதன் பிறகு உலகையே முடக்கியது.
கொரோனா போலவே விலங்குகளிடையே பல நூறு வைரஸ் பாதிப்புகள் பரவி வருகிறது. அவை மனிதர்களுக்குப் பரவினால் அது கொரோனாவை போலப் பேரழிவை ஏற்படுத்தும். இது புது வித பாதிப்பு என்பதால் யாருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியும் இருக்காது. எனவே, அதனால் ஏற்பட்ட பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.
டீசீஸ் எக்ஸ் குறித்த ஆய்வு ஏன் தேவை: வரும் காலத்தில் ஏற்படும் யாருக்கும் புரியாத இந்த டீசீஸ் எக்ஸ் பாதிப்பை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். மேற்கு ஆப்ரிக்காவில் 2014-2016 காலகட்டத்தில் ஏற்பட்ட எபோலா தொற்று நமக்கான எச்சரிக்கை மணியாகும். மருத்துவத் துறையில் நாம் மேம்பட்டு இருப்பதாகக் கருதி போதிலும் சுமார் 11 ஆயிரம் பேரை நாம் எபோலாவுக்கு இழந்தோம்.
கொரோனாவுக்கான மரபணு வரிசை கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து வெறும் 326 நாட்களில் கொரோனா வேக்சின் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.. அடுத்த முறை ஒரு பெருந்தொற்று ஏற்படும் போது 100 நாட்களில் வேக்சினை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இந்த டிசீஸ் எக்ஸ் குறித்த ஆய்வாக இருக்கிறது. எவ்வளவு விரைவாக மருந்தைக் கண்டுபிடிக்கிறோமா அவ்வளவு உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும் என்பதால் இது ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
மரபணு வரிசை: திடீரென ஒரு பெருந்தொற்று ஏற்படும் போது அதன் மரபணு வரிசையைக் கண்டறிந்து அதற்கான தடுப்பூசி கண்டறியும் ஆய்வுகளைத் தொடங்க வேண்டும். விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக் கூடிய வைரஸ் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து எதிர்கால நோய்ப் பாதிப்பைத் தடுப்பதே குளோபல் வைரோம் திட்டமாகும். இதில் நாம் குறிப்பிடத்தக்க அளவு பணிகளை மேற்கொண்டுள்ள போதிலும், இன்னும் இதில் பல சவால்கள் இருக்கிறது.
பின்தங்கிய நாடுகளில் சுகாதார கட்டமைப்பு வலுவாக இல்லாத நிலையில், அதையும் நாம் மேம்படுத்த வேண்டும். இப்படிப் பல சவால்கள் இருக்கும் நிலையில், அத்தனைக்கும் பதில்களைக் கண்டறிந்தால் மட்டுமே டிசீஸ் எக்ஸ் பாதிப்பை நம்மால் சமாளிக்க முடியும்.












Click it and Unblock the Notifications