Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா இருக்கட்டும்! "ரத்த" கண்ணீரை தரும் புது தொற்று.. மிரள வைக்கும் எலி காய்ச்சல்.. ரொம்ப டேஞ்சர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஒரு பக்கம் கொரோனா பாதிப்புகள் இப்போது திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ரஷ்யாவில் திடீரென கொடூரமான ஒரு புது வகை பாதிப்பு பரவ ஆரம்பித்துள்ளது.

கடந்த 2019இல் சீனாவில் முதலில் பரவிய கொரோனா எந்தளவுக்கு ஒரு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்று அனைவருக்கும் தெரியும். சீனாவில் தொடங்கிய இந்த பாதிப்பு உலகின் அனைத்து நாடுகளையும் ஒரு வழி செய்துவிட்டது.

 What is mouse fever that will cause Eyes bleeding spreading among Russia troops

அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு வேக்சின் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகே வைரஸ் பாதிப்பு குறைந்தது.

கொரோனா பாதிப்பு: இதற்கிடையே இப்போது மீண்டும் இந்தியா உட்பட சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன. இந்தச் சூழலில் ரஷ்யாவில் இப்போது புது வகை நோய்ப் பாதிப்பு ஒன்று பரவி வருகிறது. இந்த வகை நோய்ப் பாதிப்பு ஏற்போடும் போது நோயாளிகளின் கண்களில் இருந்து ரத்தம் கசிகிறது..

மேலும், கடுமையான தலைவலி, ஒரே நாளில் பல முறை வாந்தி ஆகிய பாதிப்புகளும் ஏற்படுவதாகவும் இதனால் ரஷ்ய வீரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்யான்ஸ் என்ற இடத்தில் ரஷ்ய வீரர்களிடையே இந்த நோய்ப் பாதிப்பு பரவும் நிலையில், இதை உக்ரைன் முதன்மை புலனாய்வு இயக்குநரகம் எலிக் காய்ச்சல் அதாவது மவுஸ் ஃபீவர் என்று அழைக்கிறார்கள். இந்த நோய் எலிகளில் இருந்து நேரடியாகப் பரவலாம். அல்லது அதன் மலத்தில் இருந்தும் கூட மனிதர்களுக்குப் பரவலாம்.

அறிகுறிகள்: இந்த பாதிப்பு ஏற்படும் போது பல கடுமையான அறிகுறிகள் இருக்கும். கடுமையான தலைவலி, உடல் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டுவது, உடலில் தடிப்புகள், ரத்த அழுத்தம் குறைதல், கண்களில் ரத்தக்கசிவு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படுவதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்ய வீரர்கள் புகார் அளித்ததாகவும் இருப்பினும், ரஷ்ய தளபதிகள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து உக்ரைன் ஊடகங்கள் கூறுகையில், "குப்யான்ஸ்க் பகுதியில் இருந்த ரஷ்ய வீரர்களிடையே இந்த மவுஸ் ஃபீவர் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்கு ஆக்டிவாக இருக்கும் ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த மவுஸ் ஃபீவர் ரஷ்ய வீரர்களின் திறனைக் கடுமையாகப் பாதிக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

போர் தொடரும்: ரஷ்யா உக்ரைன் இடையே 22 மாதங்களாகப் போர் தொடரும் நிலையில், போர் முடிவுக்கு வருவது போல எதுவும் தெரியவில்லை. சொல்லப்போனால் சமீபத்தில் ரஷ்ய அதிபர் மாளிகை, போரை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தை நடத்தப் பெரிதாகக் காரணங்கள் எதுவும் இல்லை என்று கூறியிருந்த நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ரஷ்யா தரப்பில் கூறுகையில், "நாங்கள் பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தப் போவது இல்லை. நாங்கள் ஏற்கனவே கூறியது போலப் பேச்சுவார்த்தை நடத்த எந்தவொரு காரணமும் இல்லை. எங்கள் இலக்குகளை முடித்த பிறகு தான் போர் முடியும். அவர்களாக இறங்கி வரலாம். அல்லது நாங்கள் அவர்களை வீழ்த்துவோம்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+