ஓராண்டு அடக்கி வைத்த கோபம்! அமெரிக்காவில் 8 மாத பிஞ்சு உட்பட இந்தியர்கள் கொலை.. நடந்தது என்ன! பரபர
வாஷிங்டன்: அமெரிக்காவில் 8 மாத குழந்தை உள்ளிட்ட 4 இந்தியர்களைக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றச் சென்று செட்டில் ஆகும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையில் இந்தியர்களின் பங்கு கணிசமாகவே உள்ளது. இதனால் சமீப காலமாக அங்கு இந்தியர்கள் மீதான வெறுப்பு பிரசாரமும் அதிகரித்து உள்ளது.

அமெரிக்கா
கடந்த திங்கள்கிழமை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கிய குடும்பம் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டது. 8 மாத குழந்தை உட்பட 4 பேரைக் கடத்தப்பட்டனர். இதற்கிடையே சில நாட்கள் கழித்து இந்தியக் குடும்பத்தைக் கடத்திய நபரை கலிபோர்னியா போலீசார் அடையாளம் கண்டனர். அந்த குற்றவாளி கடத்தப்பட்ட நபர்களில் ஒருவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்த முயன்று உள்ளார்.

கொலை
அப்போது அவனை அடையாளம் கண்ட போலீசார் பிடிக்க முயன்று உள்ளனர். இருப்பினும் அந்த நபர் அப்போது திடீரென தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மெர்சட் என்ற ஊரில் இருந்து இந்தியக் குடும்பத்தினர் கடத்தப்பட்ட நிலையில், சில கிலோமீட்டர் தொலைவில் ஒரு இடத்தில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மோதல்
இந்நிலையில், மெர்சட் போலீசார் இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளனர். அதாவது கொலை செய்யப்பட்ட அந்த குடும்பத்தினருக்கும் அந்த குற்றவாளிக்கும் பழைய பகை ஒன்று ஏற்கனவே இருந்து உள்ளது. கொலை செய்த ஜீசஸ் மானுவல் சல்காடோ என்பவர் அந்த குடும்பத்தினரிடம் சில காலம் முன்பு பணிபுரிந்த ஒரு ஊழியர் என்றும் இரு தரப்பிற்கும் இடையே பெரிய சண்டை இருந்து உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

ஓராண்டுக்கு முன்பு
கொலை செய்யப்பட்ட குடும்பத்தினரிடம் குற்றவாளி ஜீசஸ் மானுவல் சல்காடோ கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்து உள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே எதோ சில விஷயங்களில் மோதல் ஏற்பட்டு உள்ளது. அப்போதே சல்காடோ அவர்களை மிரட்டும் வகையில் மெசேஞ் மற்றும் மெயில் அனுப்பியதாகவும் உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.

தண்டிக்க வேண்டும்
இது தொடர்பாக உறவினர்கள் மேலும் கூறுகையில், "நிச்சயம் குற்றவாளியுடன் வேறு ஒருவர் இருந்து உள்ளார். குறைந்தது தேவையான உதவிகளைச் சென்று உள்ளார் என்று நம்புகிறோம். இந்த விவகாரத்தில் போலீசாருக்கு தேவையான ஒத்துழைப்பைக் கொடுக்கிறோம். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்க வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

வலியுறுத்தல்
அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம் சமீப காலங்களாக அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எட்டு மாத குழந்தையைக் கூட விடாமல் கொலை செய்த அந்த கொடூர குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications