"மார்பகங்களைப் பிடித்தார்.." நடுவானில் அத்துமீறிய டிரம்ப்.! 81 வயது பெண் பகீர் வாக்குமூலம்
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இப்போது மிகப் பெரிய சிக்கலை எதிர்கொண்டு வருகிறார். இதற்கிடையே டிரம்பிற்கு எதிராக இப்போது பல பெண்களும் வரிசையாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
கடந்த 2016 முதல் 2020 வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் டிரம்ப்.. குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டுத் தேர்தலில் வென்ற டிரம்ப், அமெரிக்காவின் டாப் பிஸ்னஸ்மேன்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.
அதிபரான போதும் சரி, அதற்கு முன்பும் சரி இவர் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். குறிப்பாகத் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் நாடாளுமன்றத்தில் கலவரத்தைத் தூண்டிவிட்ட சம்பவங்கள் எல்லாம் உள்ளது.

டிரம்ப்: அங்கே அடுத்தாண்டு தேர்தல் நடக்கும் நிலையில், அதிலும் போட்டியிட உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். குடியரசு கட்சியில் டிரம்பிற்கு ஆதரவு அதிகமாகவே இருக்கும் நிலையில், அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இந்த நேரத்தில் தான் இவர் மீது பலரும் வரிசையாகப் புகார் அளித்து வருகின்றனர். சமீபத்தில் தான் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் விவகாரத்தில் அவர் நியூயார்க் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் இ ஜீன் கரோல் என்பவரும் 30 ஆண்டுகளுக்கு முன்பு டிரம்ப் தன்னை பலாத்காரம் செய்ததாக நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் அளித்திருந்தார். இது டிரம்பிற்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் இப்போது அவருக்கு எதிராக மற்றொரு பெண்ணும் புகார் அளித்துள்ளார்.
பலாத்காரம்: 1970களின் பிற்பகுதியில் அமெரிக்காவில் விமானத்தில் பயணித்த போது, டிரம்ப் தன்னை பலாத்காரம் செய்ததாக ஜெசிக்கா லீட்ஸ் என்பவர் நியூயார்க் சிவில் விசாரணையில் தெரிவித்தார். எழுத்தாளர் ஈ ஜீன் கரோல் பலாத்காரம் தொடர்பான வழக்கு விசாரணையில் தான் ஜெசிக்கா லீட்ஸ் இதைக் கூறியிருந்தார். தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவர் நீதிமன்றத்திடம் பகிர்ந்திருந்தார்.
1978 அல்லது 1979ஆம் ஆண்டு நியூயார்க்கிற்குச் செல்லும் விமானத்தின் பிஸ்னஸ் பகுப்பில் பயணித்த போது, டிரம்ப் தனது ஸ்கர்டை உயர்த்தி அத்துமீறியதாக அவர் தெரிவித்தார். தன்னிடம் எந்தவொரு வார்த்தையும் டிரம்ப் கூறவில்லை. திடீரென வந்து இப்படி நடந்து கொண்டதாக அவர் கூறினார்.
பரபர வாக்குமூலம்: இப்போது 81 வயதான லீட்ஸ் மேலும் கூறுகையில், "டிரம்ப் என்னை முத்தமிட முயன்றார், என் மார்பகங்களைப் பிடித்துக் கொண்டார்," என்று அவர் தெரிவித்தார். இருப்பினும், டிரம்ப் தன் மீதான அனைத்து பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்தே வருகிறார்.
அமெரிக்கா, அமெரிக்கா, டிரம்ப், உலகம், சர்வதேசம், அமெரிக்கா, US, USA, Trump, world, international, America
79 வயதான எழுத்தாளர் கரோல் தொடர்ந்த இந்த வழக்கு தான் டிரம்பிற்கு இப்போது சிக்கலாக மாறியுள்ளது. 1990களில் ஒரு நாள் மன்ஹாட்டனில் உள்ள ஆடம்பர டிபார்ட்மென்ட் ஸ்டோரில் உடை மாற்றும் அறையில் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுத்தாளர் கரோல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெண்கள் வாக்குமூலம்: கடந்த 2016 அதிபர் தேர்தலுக்கு சில காலம் முன்பு தான் கரோல் தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து பொதுவெளியில் கூறினார். அப்போதே டிரம்பால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பல பெண்கள் கூறினர். இருப்பினும், இந்த தேர்தலில் டிரம்ப் வென்ற நிலையில், அடுத்த 4 ஆண்டுகளுக்கு அவர் அதிபர் பதவியில் இருந்த வரை அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தச் சூழலில் தான் ஸீட்ஸ் இதுபோன்ற குத்துகளைத் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதையும் டிரம்ப் தரப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், டிரம்ப் இந்த வழக்கில் வாக்குமூலம் அளிக்க மாட்டார் என்றும் டிரம்ப் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் டிரம்பிடம் இருந்து கரோல் பெருந்தொகையைக் கோரி விண்ணப்பித்துள்ளார். கரோலின் சிவில் வழக்கிலிருந்து எந்த கிரிமினல் வழக்கும் தொடர முடியாது.. இருப்பினும், டிரம்ப் இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால், பாலியல் வன்கொடுமை புகார்களில் அவர் தண்டிக்கப்படுவது இதுவே முதல்முறை. 76 வயதான டிரம்ப் பல வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்.
-
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications