"ரஷ்யா உடன் நல்லுறவு!" வாஷிங்டனில் நின்றபடி ஜெய்சங்கர் ஒரே போடு.. பெரும் வியப்பில் அமெரிக்கா! ஏன்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கிருந்தபடி அவர் ரஷ்யா உடனான உறவுகள் குறித்துக் கூறியது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியா கனடா இடையே கடந்த சில காலமாக மோதல் தொடர்வது அனைவருக்கும் தெரியும். காலிஸ்தான் பயங்கரவாதி கனடாவில் வைத்து கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா கூறியதே இதற்குக் காரணம்.

 What minister Jaishankar said about its relations with Russia

இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் இந்தியாவை வலியுறுத்தும் எனக் கனடா தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நேரத்தில் தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கே அவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்.

முக்கியம்: இதற்கிடையே அமெரிக்காவில் இருந்தபடியே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா ரஷ்யா உறவு குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளாகவே இந்தியா ரஷ்யா நாடுகள் நிலையான உறவே இருந்து வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், தொடக்கக் காலத்தில் இருந்தே ரஷ்யா இந்தியாவுக்கு முக்கிய நட்பு நாடாக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் ஹட்சன் இன்ஸ்டிடியூட்டில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது அமைச்சர் ஜெய்சங்கர் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.

மேலும், உக்ரைன் விவகாரம் காரணமாக இப்போது ரஷ்யா மேற்குலக நாடுகளை விட்டு விலகி வருவதாகவும் குறிப்பாக ஆசிய நாடுகளில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா ரஷ்யா உறவு குறித்து கேள்விக்கு அவர் கூறுகையில், "இந்த நிலைப்பாடு (ரஷ்யா உடனான உறவு) எங்களுக்கு ஒன்றும் புதியது இல்லை.. நாங்கள் சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இதுவே எங்கள் புவிசார் அரசியலின் அடிப்படை நிலைப்பாடாக இருந்து வருகிறது. உலகின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள நாடுகள் என்பதால் இந்த உறவு முக்கியமானது.

பரஸ்பர உறவு: 1940களின் பிற்பகுதியில், ஸ்டாலின் கட்டுப்பாட்டில் சோவியத் யூனியன் இருந்த போது, அது இந்தியாவுக்குச் சற்று இக்கட்டாகவே இருந்தது. ஆனால், இந்தியா நிலைமையைச் சரியாக கையாண்டது. அண்டை நாட்டிற்கு அண்டை நாடு என்ற அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இருப்பதாக நான் நினைக்கிறேன். 1950களில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர உறவு இருக்கிறது.

சோவியத் ஒன்றியமாக இருந்த போதும் சரி, அதன் பிறகு ரஷ்யாவாக மாறிய பிறகும் அதே நிலை தான் தொடர்கிறது. இந்தியா உறவு குறித்து ரஷ்யாவும் இதே கருத்தைத் தான் சொல்லும் என நினைக்கிறேன்.

ஏற்ற இறக்கங்கள்: அமெரிக்கா- ரஷ்யா, சீனா- ரஷ்யா, அமெரிக்கா- சீனா, ஐரோப்பா- ரஷ்யா என அனைத்து நாடுகளுக்கும் இடையேயான உறவுகளிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கவே செய்யும். கடந்த 70 ஆண்டுகளாகத் தொடரும் இந்தியா-ரஷ்யா உறவு மிகச் சிறப்பாக இருக்கிறது எனச் சொல்ல முடியாது. ஆனால், அது நிலையாக இருக்கிறது. அதாவது மோதல் போக்கு எதுவும் இல்லாமல் நிலையாகவே இருக்கிறது.

உக்ரைன் விவகாரத்தால் இப்போது புவிசார் அரசியல் மாறுகிறது. மேற்கு நாடுகளுடனான உறவை ரஷ்யா முற்றிலுமாக முறித்துக் கொண்டுள்ளது. இதனால் இப்போது ரஷ்யா ஆசிய நாடுகளிடையே கவனம் செலுத்தி வருகிறது. ரஷ்யா தனது வாய்ப்புகளை ஆய்வு செய்து முடிவெடுத்து வருகிறது. அவர்கள் கவனம் இப்போது இயல்பாகவே சீனாவில் பக்கம் திரும்பும். மேலும், மற்ற ஆசிய நாடுகளுடனும் கவனம் செலுத்தும். அவர்கள் லிஸ்டில் இந்தியாவும் இருக்கவே செய்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+