"உலகமே அழியும்.." பூமியை நெருங்கும் மெகா பிரச்சினை.. எந்தவொரு நாடும் தப்பிக்காதாம்! பரபர வார்னிங்
வாஷிங்டன்: உலகமே வெப்ப அலைகளால் சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், இது குறித்து ஆய்வாளர்களிடம் இருந்து புதிய எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு கோடைக் காலத்தை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம். இந்தாண்டு பிப். மார்ச் மாதமே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், மே மாதம் வெப்பம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சம் தொட்டது.
இந்தியாவில் பல இடங்களில் வெப்ப அலை ஏற்பட்டது. சென்னையில் ஓரிரு நாட்கள் வெப்பம் 106 டிகிரி வரை கூட சென்றது. இதனால் மதிய நேரத்தில் பொதுமக்கள் வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு இருந்தது.

வெப்பம்: இதற்கு முக்கிய காரணமே பருவநிலை மாற்றம் தான். இதனால் நாம் இப்போது மிக மோசமான ஒரு நிலையில் இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் முந்தைய ஆண்டை விட வெப்பம் மிகுந்த ஒன்றாக மாறி வருகிறது. புவி வெப்ப மயமாதலே இதற்குக் காரணம். தொழிற்சாலைகள், வாகனங்கள், ஏசிக்கள், பிரிட்ஜ்கள் நமது பூமியை மேலும் மேலும் வெப்பமாக மாற்றுகிறது. இதனால் மனிதர்கள் என்று இல்லை. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
முறை தவறிப் பெய்யும் மழை, கோடையில் அதீத வெப்பம், மழைக் காலத்தில் கொட்டி தீர்க்கும் வெள்ளம் ஆகியவை நாம் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளோம் என்பதைக் காட்டுகிறது. இதற்கிடையே உளகின் டாப் 50 ஆய்வாளர்களைக் கொண்ட குழு ஒன்று முக்கிய வார்னிங்கை கொடுத்துள்ளனர். அதாவது, ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் பூமி 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்து வருவதாக எச்சரித்துள்ளனர்.
புவி வெப்ப மயமாதல்: இது பார்க்க மிகக் குறைந்த அளவு வெப்பம் போல இருந்தாலும், பூமியில் இது மிக மோசமான மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த 2013 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் பூமியின் வெப்பம் 0.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கிறார்கள். வரும் ஆண்டுகளில் இது மேலும் மேலும் மோசமாகவே செய்யும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
ஐநா காலநிலை மாற்றத்திற்கான ஆலோசனை அமைப்பான ஐபிசிசி, உலக நாடுகள் பருவ நிலை மாற்றத்தைத் தடுக்க ஒதுக்கும் பட்ஜெட்டின் தரவுகளைப் பகிர்ந்துள்ளது. அதில் 2021ஆம் ஆண்டின்படி,

வார்னிங்: சமீபத்திய பகுப்பாய்வு IPCC அறிக்கையின் பின்னணியில் வருகிறது, இது கிரகம் காலநிலைக்கு மாற்ற முடியாத சேதத்தின் விளிம்பில் உள்ளது என்று எச்சரித்தது. பருவநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க 2035ஆம் ஆண்டின் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை 2019இல் இருந்த அளவில் இருந்து 60 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தாண்டு இறுதியில் துபாயில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெறும் நிலையில், அதில் இந்த இலக்கை அடைவதில் நாம் எந்தளவுக்கு உள்ளோம் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளில் புவி வெப்ப மயமாதலுக்கு மனிதர்களின் செயலே காரணம் என்று ஐபிசிசி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆபத்து: கடந்த 2011-2020 வரையிலான காலகட்டத்தில் பூமியின் வெப்பம் 1.1 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இதற்கு மனிதர்கள் செயல்பாடுகளும் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றமும் காரணமாகும். கட்டா எண்ணெய் உற்பத்தி உள்ளிட்ட புதை படிவ எரிபொருட்களைக் குறைத்தால் புவி வெப்ப மயமாதலைக் குறைக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
2030க்குள் பூமியின் CO2 வெளியேற்றத்தை நாம் 40% குறைக்க வேண்டும்.. மேலும், 2050க்குள் இதைப் பெரும்பகுதி குறைக்க வேண்டும்.. இல்லையென்றால் பூமி தற்போதுள்ள வெப்பத்தைக் காட்டிலும் 2 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பமடையும். ஏற்கனவே புவி வெப்ப மயமாதலால் கடல்கள் மற்றும் நிலப்பரப்பில் வெப்பம் அதிகரிக்கிறது. இதனால் அனைத்து உயிரினங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications