"ஜெட் இன்ஜின் முதல் டிரோன்கள் வரை.." பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் ஏன் ரொம்ப முக்கியம்!
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லும் நிலையில், இதில் இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறையைப் பயணமாக இன்று காலை அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். நேரடியாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, நாளை (ஜூன் 21) இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்தில் தரையிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு அவரை இந்திய அமெரிக்கர்கள் வரவேற்க உள்ளனர். பெரியளவில் எதிர்பார்க்கப்படும் இந்த கூட்டத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
பிரதமரின் இந்த பயணம் என்பது இந்தியா-அமெரிக்க உறவில் ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டுள்ள விவரித்த வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா, பாதுகாப்புத் தொழில்துறை ஒத்துழைப்புக்கான ரோட் மேப்பை உருவாக்குவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் என்றார்.
இதன் மூலம் கூட்டு உற்பத்தி மற்றும் இந்தியாவில் தொழில்துறை அமெரிக்காவுடன் இணைந்து உலகத் தரத்தில் செயல்படுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் என்றார். பிரதமர் மோடியின் அமெரிக்க இந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.
இந்தியாவில் ஜெட் என்ஜின்களை உற்பத்தி செய்வது தொடர்பாக அமெரிக்காவின் GE நிறுவனத்திற்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனச் சொல்லப்படுகிறது. மேலும், அமெரிக்காவிடம் இருந்து MQ-9B ஆயுதமேந்திய ட்ரோன்களை வாங்குவது தொடர்பாக ஒப்பந்தமும் இதில் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
கடந்த ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் மோடி- பைடன் சந்திப்பைத் தொடர்ந்து இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவல்களை இரு நாடுகளும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
பாதுகாப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப வர்த்தகத்தில் இருக்கும் சிக்கல்களை நீக்கி இந்தியா அமெரிக்கா இடையே தொழில்நுட்ப வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்தும் இதில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி இன்று காலை தனது அமெரிக்கப் பயணத்தைத் தொடங்கினார். நேரடியாக அமெரிக்காவின் நியூயார்க் செல்லும் அவர், நாளை ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்குகிறார். அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிற்கு செல்லும் அவர் நியூயார்க்கில் சில "முக்கிய பிரமுகர்களை" சந்திக்க உள்ளார். அதன் பிறகு வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் பைடன் உடன் பிரைவேட் விருந்து வழங்குகிறார்கள்.
மறுநாள் அமெரிக்க அதிபர் பைடன் உலன் ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி, அதன் பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.. அன்றைய தினம் அரசு விருந்தும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள குறிப்பிட்ட டாப் நிறுவனங்களின் சிஇஓக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், அவருக்கு அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் மதிய விருந்து அளிக்க உள்ளனர். அன்றைய தினம் ரீகன் மையத்தில் இந்திய-அமெரிக்க மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications