உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ‘அரக்கன்..’ டோமாஹாக் ஏவுகணையை வைத்து ரஷ்யாவை மிரட்டும் டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்தால் நீண்ட தூரம் சென்று தாக்கும் டோமஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க வேண்டியிருக்கும் என ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டோமாஹாக் ஏவுகணைகளை கண்டு ரஷ்யா கவலை அடைவது ஏன்? அந்த ஏவுகணையின் திறன்கள் என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் காணவில்லை.

what-tomahawk-missiles-are-and-why-trump-s-offer-matters-for-the-war

உக்ரைன் ரஷ்யா போர்

அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புடினை டிரம்ப் நேரில் சந்தித்து பேசினார். அதன்பிறகு பல்வேறு முறைகளில் ஜெலென்ஸ்கியுடன் உரையாடியுள்ளார். எனினும், இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இன்னும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஷ்யா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

உக்ரைனுக்கு வழங்குவோம்

இந்த நிலையில், "உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வராவிட்டால், நீண்ட தூரம் சென்று தாக்கும் டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவோம்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேசியபோது, அவர் டொமாஹாக் ஏவுகணைகள் உள்பட ஆயுதங்களை அமெரிக்காவிடம் கோரியுள்ளார்.

இதையடுத்து ட்ரம்ப் இவ்வாறு பேசினார். ட்ரம்பின் இந்த அறிவிப்பால் ரஷ்யா-உக்ரைன் போர் மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. டோமாஹாக் ஏவுகணைகள் நேரடியாக உக்ரைனுக்கு விற்கப்படாமல், நேட்டோ அமைப்புக்கு வழங்கப்படும் என்றும், அங்கிருந்து உக்ரைனுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

டோமாஹாக் ஏவுகணைகள்

"இந்த போர் முடிவுக்கு வராவிட்டால், நாங்கள் இதைச் செய்யக்கூடும். அவர்கள் (ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்) மீது டோமாஹாக் ஏவுகணைகள் பாய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை" என்று ட்ரம்ப் மேலும் தெரிவித்தார். டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு முன், இந்த ஆயுதங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை அறிய விரும்புவதாக ட்ரம்ப் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

டோமாஹாக் ஏவுகணைகள் இராணுவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், ரஷ்யாவில் உள்ள பொது மக்களுக்கு மீது தாக்குதல் நடத்தப்படாது என்றும் ஜெலென்ஸ்கி கூறினார். உக்ரைனுக்கு கொடுக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டும் டோமாஹாக் ஏவுகணைகள் எந்த அளவுக்கு வல்லமை வாய்ந்தவை என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

2,500 கி.மீ. தூர இலக்கினை தாக்கும்

டோமாஹாக் ஏவுகணைகள் என்பவை கடலிலிருந்து செலுத்தப்படும் நீளதூர ஏவுகணைகளாகும். இவை 2,500 கி.மீ. தூரம் வரை இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை. சுமார் 6.1 மீட்டர் நீளமும், 1,510 கிலோ எடையும் கொண்ட இந்த ஏவுகணைகள் சராசரியாக $1.3 மில்லியன் விலையில் இருக்கின்றன.

இந்த ஏவுகணைகள் கப்பல்களில் இருந்து செங்குத்தாகவும், நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து நேரடியாகவும் ஏவப்படலாம். இவை திட எரிபொருளால் உந்தப்பட்டு செயல்படுகின்றன. உக்ரைனுக்கு இந்த ஏவுகணைகள் வழங்கப்பட்டால், ரஷ்ய பிரதேசத்திற்குள் உள்ள இராணுவ தளங்கள், தளவாட மையங்கள், விமான நிலையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் போன்ற இலக்குகளை தாக்கும் அதன் திறனை கணிசமாக அதிகரிக்கும்.

பெர்சியன் வளைகுடா போர்

டோமாஹாக் ஏவுகணைகள் முதன்முதலில் 1991-ல் பெர்சியன் வளைகுடா போரின்போது 'ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்டன. ஈராக் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் இடையே நடந்த இந்த மோதலின் போது அமெரிக்கா இந்த ஏவுகணைகளை பயன்படுத்தி ஈராக் உள்ள வலுவான இலக்குகளை அழித்தது.

நிலதள வான் (land-based) ஏவுகணை தளங்கள், கமாண்ட் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், பாக்தாத்தில் உள்ள ஈராக் ஜனாதிபதி மாளிகை மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவற்றை இந்த ஏவுகணைகள் தாக்கி அழித்தன. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் GPS வசதியுள்ள டொமாஹாக் ஏவுகணைகளை சோதித்து, யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் தளங்கள் மீது பயன்படுத்தியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+