அமெரிக்காவில் மோடியை நோக்கி கேள்வி.. சப்ரினா மீது பாய்ந்த பாஜக ஆதரவாளர்கள்! கடுப்பான வெள்ளை மாளிகை
வாஷிங்டன்: அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு எதிரான சமூக வலைதள தாக்குதலுக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட இந்த பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் ஊடகத்தின் வெள்ளை மாளிகைக்கான செய்தியாளர் சப்ரினா சித்திக்கி பிரதமர் மோடியிடம் எழுப்பிய கேள்வி பெரும் விவாத பொருளானது.

இந்தியாவில் வாழும் சிறுபான்மையின மக்களின் மத சுதந்திரம், கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், மத அடிப்படையில் சிறுபான்மையினர்களாக வாழும் மக்களை இந்திய அரசு பாகுபாட்டுடன் நடத்துவதாகவும், அரசை விமர்சிப்பவர்களை கட்டுப்படுத்துவதாக பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்து இருப்பதையும் அவர் மேற்கோள் காட்டினார்.
"இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையின மக்களின் உரிமைகளை மேம்படுத்தவும், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவும் அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க உள்ளது." என சப்ரினா கேள்வி எழுப்பினார். இதனை கேட்ட பிரதமர் மோடி சில வினாடிகள் அமைதியாக இருந்து பின்னர் பேசத் தொடங்கினார்.
அவர் பேசுகையில், "நாங்கள்தான் ஜனநாயகம். இந்தியா மற்றும் அமெரிக்காவின் டி.என்.ஏவில் ஜனநாயகம் ஓடுகிறது. எங்கள் ஆவியுடன் ஜனநாயகம் கலந்துள்ளது. சாதி, மத அடிப்படையில் பாகுபாட்டுக்கு இங்கே இடமில்லை. அனைவரையும் ஒன்றாக முன்னேற்ற வேண்டும் என்பதே இந்தியாவின் நம்பிக்கை.
சாதி, மதம், இனம், வசிப்பிடம், வயது அடிப்படையில் எந்த பாகுபாடும் இன்றி அரசின் உதவிகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைகின்றன." என்று தெரிவித்தார். இதற்கிடையே பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் சப்ரினா சித்திகி மீது சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இது தொடர்பாக ட்விட்டரில் இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை அணிந்து தனது பழைய புகைப்படத்தை பகிழ்ந்த சப்ரினா, "சிலர் எனது தனிப்பட்ட பின்னணியை வைத்து விமர்சிக்கின்றனர். எனவே இந்த புகைப்படத்தை பகிர்கிறேன். சில சமயங்களில் அவர்களைவிட அவர்களின் அடையாளர்களே சிக்கலாக உள்ளன." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து அவர் பணிபுரியும் வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் தெரிவிக்கையில், "மோடியிடம் கேள்வி எழுப்பியதற்காக எங்கள் சக பணியாளர் சப்ரினா சித்திக்கு எதிராக இந்தியாவில் ஆன்லைனில் தாக்குதல்கள் தொடகின்றன. அவர்களில் சிலர் அரசியல்வாதிகள். அவர்களுக்கு மோடி அரசுடன் தொடர்பு உள்ளது. சப்ரினா இஸ்லாமியர் என்ற காரணத்தாலும், தன் சொந்த பாரம்பரியம் பற்றி கேள்வி எழுப்பியதாலும் அவரை குறி வைக்கின்றனர். ஜனநாயக தலைவரிடம் கேள்வி எழுப்பியதற்காக பத்திரிகையாளர் மீது நடக்கும் இத்தகைய தாக்குதல் தொடர்பாக வெள்ளை மாளிகை என்ன சொல்லப்போகிறது?" என்று அந்த ஊடகம் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையும் சப்ரினா சித்திகி மீதான ஆன்லைன் தாக்குதலை கண்டித்து உள்ளது. வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூலோபாய தொடர்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கையில், "சப்ரினா சித்திக்குக்கு எதிரான தாக்குதல்களை எந்த சூழலிலும் ஏற்க முடியாது. இந்த தாக்குதல்கள் ஜனநாயக கொள்கைகளுக்கு முரணானது." என்று தெரிவித்துள்ளார்.
-
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications