அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவி கைது.. கோவையில் பிறந்தவராம்.. என்ன மேட்டர்.. பரபர தகவல்
வாஷிங்டன்: இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த போராட்டத்தில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே அவர்களில் ஒரு மாணவி குறித்த சில பரபர தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் கடந்த சில மாதங்களாகவே ஒருவித பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் தொடர்ந்து மிரட்டி வருகிறது. ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் அதிகம் என்றே உலக நாடுகள் எச்சரிக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் என்றால் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் பல மாதங்கள் கடந்தும் தொடர்ந்து வருகிறது. அதிலும் மக்கள் அதிகம் வசிக்கும் தெற்கு காசாவில் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
போராட்டம்: இதற்கிடையே இஸ்ரேலுக்கு எதிராகப் போராட்டங்கள் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன. அங்குள்ள சில பல்கலைக்கழகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இரு நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக இரண்டு பிரின்ஸ்டன் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் இந்திய வம்சாவளி மாணவர் அச்சிந்தியா சிவலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சர்வதேச ரூல்ஸை மீறிய இஸ்ரேல்? பரபர வார்னிங்.. அமெரிக்காவில் வெடிக்கும் புதிய பிரச்சினை! என்ன காரணம்
பிரின்ஸ்டன் மாணவர்கள், அங்குள்ள சில ஆசிரியர்கள் மட்டுமின்றி வெளியே இருந்தும் சிலர் வந்து பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தப் போராட்டத்தின் போது தான் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது: இது தொடர்பாகப் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் மோரில் கூறுகையில், "இந்தப் போராட்டத்திற்காக அவர்கள் கூடாரத்தை அமைத்துள்ளனர். இது விதிமீறலாகும். அனுமதி இல்லாமல் நுழைந்தது உள்ளிட்ட காரணங்களால் இரண்டு பேர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அத்துமீறி நுழைந்த போராட்டம் செய்ததால் அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளோம்" என்றார்.
யார் இவர்: சரி விஷயத்திற்கு வருவோம். கைது செய்யப்பட்ட அந்த இந்திய வம்சாவளி மாணவி யார்.. அவர் எதற்காக இந்த போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறித்துப் பார்க்கலாம். அந்த மாணவியின் பெயர் அச்சிந்திய சிவலிங்கம். இவர் தமிழ்நாட்டின் கோவையில் பிறந்தவர். இருப்பினும், பிறந்தது மட்டும் தான் கோவை. இவர் வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் கொலம்பஸ் பகுதியில் தானாம்.
பிரின்ஸ்டனில் பல்கலைக்கழகத்தில் இப்போது இவர் முதுகலைப் படிப்பைப் படித்து வருகிறார். இதற்கு முன்பாக ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்துள்ளார்.
கடந்த காலங்களில் அவர் பல தொண்டு நிறுவனங்களில் வேலை செய்துள்ளார். கடைசியாக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் அவர் பணியாற்றி இருந்தார். இந்த மாணவிதான் பாலஸ்தீன மக்கள் மீது காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி இருக்கிறார். அப்போது தான் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவிரமடையும் போராட்டம்: இஸ்ரேல் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுபோல இஸ்ரேலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாக சுமார் 550 பேர் கைது செய்துள்ளனர். வரும் நாட்களில் அங்குப் போராட்டங்கள் மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications