அமெரிக்கா அலறுதே.. Ex ராணுவ வீரருக்கு மனநல பிரச்சினை.. சரியாக அப்போது கிடைத்த துப்பாக்கி.. பகீர்
வாஷிங்டன்: அமெரிக்கா இன்று நடைபெற்ற கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ராபர்ட் கார்ட் குறித்த சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
என்ன தான் உலக வல்லரசாக இருந்தாலும் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கதையாகவே இருக்கிறது. பள்ளிகள், மருத்துவமனைகளிலும் கூடத் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அங்கு நடந்தே வருகிறது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் பலர் கொல்லப்படுகிறார்கள். அதுபோன்ற மற்றொரு ஷாக் சம்பவம் தான் இன்று நடந்துள்ளது.
அமெரிக்கா துப்பாக்கிச் சூடு: அமெரிக்காவில் இன்று நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு அனைவரையும் அதிர வைப்பதாக இருந்தது. இந்த மோசமான துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த கொடூரத்தை அரங்கேறிய நபர் ராபர்ட் கார்ட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக மைனே மாகாணத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. கொலையாளியைத் தேடும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எமர்ஜென்சி நிலை: துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை இன்னும் பிடிக்கவில்லை என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள உணவகம், பார் எனப் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், இதில் ஈடுபட்ட ராபர்ட் கார்ட்டை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ராபர்ட் கார்ட்டின் பேஸ்புக் போட்டோவையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இந்தக் கொடூரத்தில் ஈடுபட்ட ராபர்ட் கார்ட் என்பவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்பது மற்றொரு அதிர்ச்சி தரும் தகவலாகும். இவர் கடந்த காலங்களில் குடும்ப வன்முறை புகாரிலும் கைது செய்யப்பட்டவர். மேலும், இவருக்கு மனநலப் பிரச்சினைகளும் இருந்துள்ளது. அங்குள்ள ராணுவ பயிற்சி தளத்தையும் தாக்குதல் நடத்துவதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் அவருக்கு 2 வாரங்களுக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சையும் கூட அளிக்கப்பட்டது.
தேடுதல் வேட்டை: இந்தளவுக்குச் சிக்கல் இருக்கும் ஒருவருக்கு எப்படி இந்த அதிநவீனத் துப்பாக்கி கிடைத்தது என்பதே பலருக்கும் கேள்வியாக உள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்தும் கொலையாளியைப் பிடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது. விரைவில் அந்த கொலையாளி பிடிக்கப்படுவார் என்றே போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே துப்பாக்கி வைத்துக் கொள்ளப் பெரியளவில் கட்டுப்பாடுகள் இல்லை. மேலும் துப்பாக்கியை வாங்குவோருக்கு மனநல பிரச்சினை உள்ளதா என்பது குறித்தும் பெரியளவில் ஆய்வு செய்ய மாட்டார்கள். இதுவே அங்கே பிரச்சினைக்கு முக்கிய காரணமாகும். அங்குள்ள ஜனநாயக கட்சியினர் துப்பாக்கிகளை வைத்துக் கொள்வதில் கட்டுப்பாடுகள் தேவை என்கிறது. அதேநேரம் குடியரசு கட்சியினர் இது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று எதிர்க்கிறார்கள்.
இதில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்படாமல் இருப்பதே துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெறக் காரணமாகும். இந்த ஆண்டு மட்டும் இதுவரை நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவங்கள் 500க்கும் மேல் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications